தடுத்தாட்கொண்ட புராணம்
பெரிய புராணத்தில் 5-ஆவதாக விளங்குவது தடுத் தாட்கொண்ட புராணம். இது சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருவெண்ணெய் நல்லூரில் விளங்கும் அருட்டுறை என்னும் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் கிருபாபுரீசர் தடுத்து ஆட் கொண்ட வரலாற்றைக் கூறுவது. இதில் உள்ள முதல் செய்யுளின் கருத்து வருமாறு: -
கங்கையாற்றையும் பிறைச்சந்திரனையும் பாம்பு களையும் கொன்றை மலர் மாலையையும் தம்முடைய திரு முடியின்மேல் தங்கவைத்தவரும், அழகிய கண்களைப் பெற் றவருமாகிய கிருபாபுரீசர் ஒலையைக் காண்பித்துத் தடுத்து ஆட்கொண்டவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் திருவவதா ரம் செய்தருளிய திருநாவலூர் உள்ள நாடு, மங்கைப் பரு வத்தை அடைந்த பெண்மணிகளுடைய முகங்களாகிய குளிர்ச்சியைப் பெற்ற சந்திரனுடைய இரண்டு பக்கங்களிலும் ஒடிச் சென்று சிவந்த கயல் மீன்களைப் போன்ற கண்கள் அவர்கள் காதுகளில் அணிந்த மகரக் குழைகளை விரும்பித் சேரும் காட்சியைப் பெற்ற திருமுனைப்பாடி நாடு என்னும் நாடு ஆகும். பாடல் வருமாறு: