பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெரிய புராண விளக்கம்-2

நம்பி ஆரூரன் தான் விருப்பத்தைக் கொண்ட என்னுடைய அடிமையானவன் என்பதை அறிவிப்பதற்காக யான் காண் பித்த அடிமை ஒலையைக் கிழித்துவிட்டு, பழுத்த அறிவைப் பெற்ற சான்றோர்களே, அவன் எனக்கு முன்னால் இங்கே வந்தான்.இதுவே யான் முறையிடும் வழக்கு' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தான். பாடல் வருமாறு: +

வேதபாரகரின் மிக்கார் விளங்குபேரவைமுன் சென்று

நாதனாம் மறையோன் சொல்லும் காவலூர் ஆரு ரன்தான்

காதலென் அடியான் என்னக் காட்டிய ஒலை கீறி -

மூதறி விர்முன் போந்தான்; இதுமற்றென் முறைப்பா'

- டென்றான். மூதறிவீர்-இந்த நியாய சபையில் அமர்ந்து விளங்கும் பழுத்த அறிவைப் பெற்ற வேதியர்களே: ஒருமை பன்மை மயக்கம். வேத-இருக்கு வேதம், யஜ7ர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களி னுடைய, ஒருமை பன்மை மயக்கம். பாரகரின்-கரையைக் கண்டவர்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். மிக்கார்மிகுதியான சிறப்பைப் பெற்றவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். விளங்கும்-தோற்றப் பொலிவோடு திகழும். பேர்-பெருமையைப் பெற்ற. அவை- நியாய சபைக்கு. முன்-முன்னால், சென்று-எழுந்தருளி. நாதனாம்தலைவனாகிய கிருபாபுர்சனாகும். மறையோன்-வேதியன். சொல்லும்-பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய் வான். நாவலூர்-திருநாவலூரில் வாழும். ஆரூரன்-நம்பி யாருரனாகிய சுந்தரமூர்த்தி. தான்' என்றது. சுந்தர மூர்த்தி நாயனாரை. காதல்-விருப்பத்தைக் கொண்ட என்-என்னுடைய. அடியான்-அடிமையாக உள்ளவன், என்ன-என்பதைத் தெரிவிப்பதற்காக. க்:சந்தி. காட்டியயான் இவனுக்குக் காண்பித்த, ஒலை-அடிமை ஒலையை, கீறி-இவன் கிழித்துப்போட்டு விட்டு, முன்