பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 93.

உங்களுக்கு முன்னால், போத்தான்-வத்தான், இதுஇதுவே. மற்று: அசை நிலை. என்-என்னுடைய. முறைப் பாடு-முறையிட்டுக்கொள்ளும் வழக்கு. என்றான்-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தான்.

அடுத்து வரும் 52-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: திருவெண்ணெய் நல்லூரில் விளங்கும் நியாய் சபையில் அமர்ந்திருப்பவர்களும், அறிவில் மிக்க சிறப்பைப் பெற்றவர் களும் ஆகிய வேதியர்கள், வேதியர்கள் ஒருவருக்கு அடிமை யாக ஆவது இந்தப் பெருமையைப் பெற்ற நாட்டில் இல்லையே! ஐயா, நீ என்ன கூறினாய்?’ என்று கேட்டார் கள் அதற்கு அந்த வேதியனுடைய வடிவத்தில் எழுந்தரு ளிய கிருபாபுரீசன், அவ்வாறு அடிமையாக வந்த வண்ணம் சம்மதமே அல்லவோ? யான் முறையிடும் வழக்கானது: இந்தச் சுந்தரமூர்த்தி கிழித்துப் போட்டுவிட்ட அடிமை ஒலை இவனுடைய தந்தைக்குத் தந்தையாகிய பாட்டன் சம்மதித்து எழுதிக் கொடுத்தது' என்று ஒப்பற்றவனாய் நின்றவனாகிய கிருபாபுரீசன் திருவாய் மலர்ந்தருளிச் செய் தான். பாடல் வருமாறு: -

அந்தணர் அவையில் மிக்கார், மறையவர் அடிமை ஆதல் இந்தமாகிலத்தில் இல்லை; என்சொன்னாய் ஐயா!

- . என்றாா; வந்தவா றிசைவே அன்றோ வழக்கிவன் கிழித்த

தந்தைத்ன் தந்தை நேர்ந்த தென்றனன் தனியாய்

கின்றான்' அவையில்-திருவெண்ணெய் நல்லூரில் விளங்கும்

நியாய சபையில் இருப்பவர்களும்; இட ஆகுபெயர்.மிக்கார்அறிவில் மிகுதியான சிறப்பைப் பெற்றவர்களும் ஆகிய ஒருமை பன்மை மயக்கம். அந்தணர்-வேதியர்கள்: ஒருமை

பன்ன்ம மயக்கம், மறையவர்-வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம் அ டி ைம-வேறு ஒரு வ ரு க் கு.