பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 95

岛 罗

வளமே.’’, கேழில் பரஞ்சோதி,’, ஒப்பிலாதன உவமனில் இறந்தன. ஒண்மலர்த் திருப்பாதத் தப்பன். , 'ஒப்பிலா மணியே’’, ஒப்புனக் கில்லா ஒருவனே.’’ என்று மாணிக்க வாசகரும், ஏதொக்கும் என்பதனை யார்அறிவார்.” என்று காரைக்கால் அம்மையாரும், ஒப்பணஇல்லா ஒளி கிள்ர் உன்மந்தமும் அமைத்தான்.’’ என்று சேரமான் பெருமாள் நாயனாரும், 'தனக்குவமை இல்லாதான்.'

(திருக்குறள், 7) என்று திருவள்ளுவரும், தன்நேர் பிறர் இல்லானை.’’ என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனா ரும். 'தனையொப்பாரை இல்லாத் தனியை.’’ என்று மாணிக்க வாசகரும், தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன். (திருமந்திரம், 7) என்று திருமூலரும் பாடி,

யருளியவற்றைக் காண்க. .

பின்பு உள்ள 53-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

சம்மதத்தோடு எழுதியிருக்கும் அடிமை ஒலையை இந்த அந்தணன் காண்பித்தான்.ஆனால் இன்றைக்கு வேகத் தோடு வலுக்கட்டாயமாக அந்த ஒலையை வாங்கிச் சுந்தர மூர்த்தி கிழித்துப் போடுவது அவனுக்கு வெற்றி ஆகுமா? தன்னுடைய திருமேனியில் உள்ள தசைகள் யாவும் சுருங்கும் வண்ணம் மூப்பை அடைந்த இந்த வேதியன் தன்னுடைய வழக்கை எங்களுக்கு நன்றாகத் தெரிந்து சேருமாறு எடுத்துக் கூறினான்; தளர்ச்சி சிறிதும் இல்லாத நம்பியாரூரர் எண்ணிய எண்ணம் என்ன?’ என்று திருவெண்ணெய் நல்லூரில் உள்ள நியாய சபையில் மிக்க அறிவோடு இருக்கும் வேதியர்கள் கேட்டார்கள். பாடல்

வருமாறு: - - - - .

இசைவினால் எழுதும் ஒலை காட்டினான் ஆகில் இன்று விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ? தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சா ச்

. • , சொன்னான் அசைவில்ஆ ரூரர் எண்ணம் என்’ என்றார் அவையில்

- . மிக்கார்.'