96 பெரிய புராண விளக்கம்-2
இசைவினால்-இந்தச் சுந்தரமூர்த்தியின் பாட்டனார் தம்முடைய சம்மதத்தோடு, உருபுமயக்கம். எழுதும்வரைந்திருக்கும். ஒலை-அடிமை ஒலையை காட்டினான்இந்த அந்தணன் காண்பித்தான். ஆகில் - ஆனால், இன்று-இன்றைக்கு. விசையினால்-வேகத்தோடு, உருபு மயக்கம். வலிய-வலுக்கட்டாயமாக. வாங்கி-அந்த ஒலையை வாங்கிக்கொண்டு. க்சந்தி. கிழிப்பது-கிழித்துப் போடுவது. வெற்றி-சுந்தரமூர்த்திக்கு வெற்றி. ஆமோஆகுமோ. தசை-தன்னுடைய திருமேனியில் உள்ள தசைகள்; ஒருமை பன்மை மயக்கம். எலாம்-யாவும்: இடைக்குறை. ஒடுங்க-சுருங்கும் வண்ணம். மூத்தான். மூப்பினை அடைந்த இந்த அந்தணன். வழக்கினை-தன்னு டைய வழக்கை. க்:சந்தி. சார-எங்களிடம் கேட்குமாறு: அமைய. ச்:சந்தி. சொன்னான். எடுத்துக் கூறினான். அசைவு-சிறிதேனும் தளர்ச்சி.இல்-இல்லாத கடைக்குறை. ஆரூரர்-நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனார். எண்ணம்-எண்ணியிருக்கும் எண்ணம். என்-என்ன. அவை யில்-திருவெண்ணெய் நல்லூரில் உள்ள நியாய சபையில் அமர்ந்திருக்கும். மிக்கார்-மிகுதியான அறிவினால் சிறப்பை அடைந்த வேதியர்கள்:ஒருமை பன்மை மயக்கம். என்றார்என்று கேட்டார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.
அடுத்து வரும் 54-ஆம் பாடலின் கருத்து வருமாறு: -
எல்லா நியாய சாத்திரங்களையும் நன்றாகக் கற்றுத் தெரிந்துகொண்டு விளங்கும் வேதியர்களே, அடியேனை ஆதி சைவப் பிராம்மணர் சாதியில் பிறந்தவன் என்பதை நீங்கள் அறிவீர்கள்: அடியேனைத் தனக்கு வேறாக உள்ள அடிமை என்று இந்த வேதியன் விடாப்பிடியாகச் சொன் னால் உள்ளத்தினால் தெரிந்து கொள்வதற்கு எட்டாத மாய மான வார்த்தைகள் இவை அடியேன் என்ன கூறுவேன்