பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பெரிய புராண விளக்கம்-2

ஆங்கிலத்தில் கூறுவர். ஒலை-அடிமை ஒலையை. மாட்சியில்பெருமையோடு; உருபு மயக்கம். காட்ட-உங்களிடம் காண்பிப்பதற்காக வைத்தேன்-நான் வைத்திருக்கிறேன். மாயை-மாயையான செயல்களில்; ஒருமை பன்மை மயக்கம். வல்லான்-வல்லமையைப் பெற்றவனாகிய கிருபாபுரீசனாகிய வேதியன். என்றனன்-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய் தான்.

பிறகு வரும் 57-ஆம் பாட்டின் உள்ளுறை வருமாறு:

நீ மூல ஓலையைக் காண்பிக்க முடியுமானால் அதை இவ்விடத்தில் எங்களுக்குக் காண்பிப்பாயாக’’ என்று நியாய சபையில் அமர்ந்திருக்கும் வேதியர்கள் கூற, அந்த வேதியன் :இவன் வலிந்து என்னிடமிருந்து பிடுங்கிக் கொள்ளாத வண்ணம் நீங்கள் கூற வல்லமை உடையவர்களானால் நான் அந்த மூல ஓலையை உங்களுக்குக் காட்டுவேன்' என்று திருவாய் மலர்ந்தருளிர் செய்ய, செல்வத்தைப் பெற்றவனும், இருக்கு வேதம். யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறை யாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவனும் ஆகிய வேதி யனே, நாங்கள் அவ்வாறு தீய செயல் நடக்குமாறு விடமாட் டோம்' என்று நியாய சபையில் வீற்றிருக்கும் வேதியர் கள் கூறினார்கள்; துன்பத்தைப் போக்கிச் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்து ஆட்கொள்ளும் பொருட்டு நின்ற கிருபாபுரீசராகிய அந்தணர் அடிமை ஒலையை எடுத்துக் கொண்டு நியாய சபைக்கு எழுந்தருளினார். பாடல் வருமாறு: - -

வல்லையேல் காட்டிங் கென்ன மறையவன், - 'வலிசெய் யாமல் சொல்லநீர் வல்லி ராகில் காட்டுவேன்’ என்று சொல்லச் செல்வநான் மறையோய், நாங்கள் தீங்குற ஒட்டோம்

- - எனறாா அல்லல்தீர்த் தாள கின்றார் ஆவணம் கொண்டு Y - - சென்றார்.’’