பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 101

வல்லையேல்-நீ மூல ஓலையைக் காண்பிக்க முடியு மானால். இங்கு-இந்த நியாய சபையில். காட்டு-காண்பிப் பாயாக என்ன-என்று நியாய சபையில் அமர்ந்திருக்கும் வேதியர்கள் கூற. மறையவன்-வேதியனாக வந்தருளிய கிருபாபுரீசன். வவி செய்யாமல்-இந்தச் சுந்தரமூர்த்தி வலிந்து என்னிடமிருந்து அதைப் பிடுங்கிக் கொள்ளாத வண்ணம். சொல்ல-இவனுக்குக் கூற. நீர்-நீங்கள், வல்லி ராகில்-வல்லமையை உடையவர்களானால்; ஒருமை பன்மை மயக்கம். காட்டுவேன்-நான் அந்த மூல ஓலையை உங்களுக்குக் காண்பிப்பேன். என்று-என. சொல்லதிருவாய் மலர்ந்தருளிச் செய்ய. ச்: சந்தி. செல்வ-செல்வத் தைப் படைத்த. நான் மறையோய்-இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய அந்தணனே. மறை: ஒருமை பன்மை மயக்கம். நாங்கள்-இந்தச் சபையில் உள்ள நாங்கள். தீங்கு-அவ்வாறு ஒரு கெடுதலும். உற-உண்டாகும் வண்ணம். ஒட்டோம்-விடமாட்டோம். என்றார்என்று கூறினார்கள்; ஒருமை பன்மை மயக்கம். அல்லல்-துன்பங்களை ஒருமை பன்மை மயக்கம்.தீர்த்துபோக்கியருளி. ஆள-சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்து ஆண்டுகொள்வதற்கு. நின்றார்-நின்ற வேதியராக வந்த கிருபாபுரீசர். ஆவணம்-அந்த மூல அடிமை ஒலையை. கொண்டு-எடுத்துக் கொண்டு. சென்றார்-நியாய சபைக்கு எழுந்தருளினார்.

அடுத்து உள்ள 58-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

"இருட்டைப் போன்ற கருமையான ஆலகால விடத்தை மறைத்து விட்டு எழுந்தருளிய கழுத்தைப் பெற்றவனாகிய கிருபாபுரீசனுடைய கையில் வைத்திருந்த மூல அடிமை ஒலையைப் பார்த்து நியாய கு ல் உள்ள வேதியர்கள்