பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பெரிய புராண விளக்கம்-2

கட்டளை இட, கிருபாபுரீசருடைய திருவருளைப் பெற்ற கணக்குப் பிள்ளையும் அந்த மூல அடிமை ஒலையை வணங்கி விட்டு வாங்கிக் கொண்டு சுருட்டப் பெற்ற துணியை விலக்கி விட்டு விரித்துப் பார்த்து அதனுடைய பழமையைப் பார்த்துத் தெளிவைப் பெற்றவர்களாகிய நியாய சபையில் உள்ள வேதியர்கள் கேட்குமாறு அந்த ஒலையில் உள்ள வார்த்தைகளைப் படித்துக் கூறுகிறான். பாடல் வருமாறு:

'இருள்மறை மிடற்றோன் கையில் ஒலைகண் டவை

- - யோர் ஏவ அருள்பெறு கரணத் தானும் ஆவணம் தொழுது வாங்கிச்

சுருள்பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை

நோக்கித்

தெருள்பெறு சவையோர் கேட்ப வாசகம்

செப்பு கின்றான்."

- இருள்-இருட்டைப் போன்று கருமையான ஆலகால விடத்தை, உவம ஆகு பெயர். மறை-மறைத்துவிட்டு எழுந்தருளிய. மிடற்றோன்-கழுத்தைப் பெற்றவனாகிய கிருபாபுரீசனுடைய. கையில்-கையில் வைத்திருந்த ஒலைமூல அடிமை ஒலையை. கண்டு-பார்த்துவிட்டு. அவை யோர்-அந்த நியாய சபையில் அமர்ந்திருந்த வேதியர்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஏவ-தனக்குக் கட்டளை இட. அருள்-கிருபாபுரீசர் வழங்கிய திருவருளை. பெறு-பெற்ற. கரணத்தானும்-திருவெண்ணெய் நல்லூர்க் க ண க் கு ப் பிள்ளையும். ஆவணம்-அந்த மூல அடிமை ஒலையை" தொழுது-வணங்கிவிட்டு. வாங்கி-தன்னுடைய கைகளில் வாங்கிக் கொண்டு. ச்:சந்தி. சுருள்-சுருட்டுதலை. பெறுபெற்ற, மடியை-துணியை, அடிமை ஒலையை வைத்துச் சுருட்டிய துணியை. விரித்தனன்-அவிழ்த்து அதில் இருந்த மூல ஒ ைல யை விரித்தவனாகி; மு ற் .ெ ற ச் ச ம். .ெ தா ன் ைம - அ ந் த ஒ ைல யி ன் ப ழ ைம ைய. நோக்கி-சரிபார்த்துவிட்டு, இது பழைய ஒலைதானா என்று