T06 பெரிய புராண விளக்கம்-2
பம் உள்ளது வேறு இருக்குமானால் இந்த அடிமை ஒலையுட னும் அதில் வரைந்திருக்கும் எழுத்துக்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துத் தெரிய வந்த செய்தியைக் கூறுங்கள்’’ என்று வலிய எழுந்தருளிச் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்து ஆண்டுகொள்ளும் வள்ளலாகிய கிருபாபுரீசன் திருவாய் மலர்ந்தருளிச் செய்தான். பாடல் வருமாறு:
'அந்தணர் கூற, இன்னும் ஆள் ஒலை இவனே காண்பான்
தங்தைதன் தந்தை தான்வே றெழுதுகைச்
சாத்துண் டாகில் இந்த ஆவணத்தி னோடும் எழுத்துநீர் ஒப்பு நோக்கி வந்தது மொழிமின் என்றான் வலியஆட் கொள்ளும்,
வள்ளல். ’’ அந்தணர்-திருவெண்ணெய் நல்லூரில் விளங்கும் நியாய சபையில் அமர்ந்திருக்கும் வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கூற-அவ்வாறு சொல்ல. இன்னும்இந்த அடிமை ஒலைக்கு மேலும். ஆள் ஒலை-அடிமை ஒலையை. இவனே-இந்தச் சுந்தரமூர்த்தியே. காண்பான் -பார்க்கும் பொருட்டு. தந்தைதன்-இவனுடைய தந்தை யினுடைய தன்: அசை நிலை. தந்தைதான்-தந்தையா கிய பாட்டன் தான். வேறு.இதையல்லாமல் வேறு. எழுது -வரைந்த. கைச்சாத்து-கையொப்பம் இட்ட ஒலைகள்; ஆகு பெயர். உண்டாகில்-இருக்குமானால். இந்த ஆவணத் தினோடும்-இந்த அடிமை ஒலையுடனும். எழுத்துகையெழுத்துக்களை ஒருமை பன்மை மயக்கம். நீர்-நீங்கள். ஒப்பு நோக்கி-ஒப்பிட்டுப் பார்த்து வந்தது-உங்களுக்குத் தெரிய வந்த செய்தியை. மொழிமின்-கூறுங்கள். வலியதானே வலிய வந்து. ஆட்கொள்ளும்-சுந்தரமூர்த்தி நாய னாரைத் தடுத்து ஆண்டு கொள்ளும். வள்ளல்-வள்ளலாகிய கிருபாபுரீசனாகிய வேதியன். என்றான்-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தான். - -
சிவபெருமானை வள்ளல் என்று வழங்குதல்: