பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 107

"வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை.’’, 'ஆமாத் துர் அம்மான் எம் வள்ளல்., வள்ளல் இருந்த மலை. ’, விடையேறும் வள்ளல்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், காயந் தன்னுள் புண்டரீ கத் திருந்த வள்ளலை.', வள்ளல் மாமயி லாடு துறையுறை வெள்ளம் தாங்கு சடையனை. , ஆறை வடதளி வள்ளவை. புள்ளிருக்கு வேளுர் வள்ளல்.’’ , வள்ளலா கிய வான்மியூர் ஈசனே. மணஞ்சேரி எம் வள்ளலார்.’’, "வள்ளலே போற்றி மணாளா போற்றி. என்று திருநாவுக் கரசு நாயனாரும், வள்ளல் எந்தமக்கே துணை.’’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், வானோர்க் கமுதம் வள்ள்ல் போற்றி. , ' வள்ளல் வரவர ளந்தொழிந்தான் என் மனத்தே.’’, 'பரியின்மேல் வந்த வள்ளல்..' என்று மாணிக்க வாசகரும், வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்.’’, “ஊர்விடை வள்ளலார்.”, மலையாளுடன் சுட வீற்றி ருந்த வள்ளலாரை.', அரத்துறை வள்ளலார்.’’ என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க.

அடுத்து உள்ள 62-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

கூடியிருந்த நியாய சபையில் வீற்றிருந்தவர்களும், பெருமையைப் பெற்றவர்களும் ஆகிய வேதியர்களும் திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளிய அரசராகிய சுந்தரமூர்த்தி நாயனார் முன்பு மயக்கத்தை அடைந்திருந்த நிலை தெளிவை அடைய, அந்தப் பாட்டனாகிய வேதியன். தன்னுடைய கையினால் எழுதிய எழுத்துக்களால் அமைந்த அடிமை ஒலையைப் பாதுகாக்கப் பெற்ற கருவூலத்திலிருந்து வேறு ஒர் அடிமை ஒலையை வர வழைத்து வேதியர் கொடுத்த ஒலையோடு ஒப்பிட்டுப் பார்த்து, இந்த இரண்டு அடிமை ஒலைகளும் சமமாக இருந்தது என்ன ஆச்சரியம்! இனிமேல் செய்து பார்க்க வேண்டிய காரியம் வேறு இல்லை' என்று கூறினார்கள். பாடல் வருமாறு: -