தடுத்தாட்கொண்ட புராணம் {09
நம்பியாரூரர் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனாரே, இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்திய யணம்செய்து நிறைவேற்றிய முனிவராகிய இந்த வேதியரிடம் நீர் தோல்வியை அடைந்து விட்டீர்; உரிய தன்மையோடு நீர் இவருக்குக் குற்றேவல் புரிவது உம்முடைய கடமை’ என்று நல்ல குணங்களினால் மிகுதியான சிறப்பைப் பெற்ற வர்களும், மேம்பாட்டைப் பெற்றவர்களும், நியாய சபையில் அமர்ந்திருப்பவர்களும் ஆகிய வேதியர்கள் கூற, அதைக் கேட்டு நம்பியாரூரராகிய சுந்தர மூர்த்தி நாயனார். 'நீங்கள் விதித்த நீதி முறை இதுவே ஆனால் நான் இந்தத் தீர்ப்புக்குச் சம்மதிக்க மாட்டேன்’ என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, அது பொருந்துமோ?' என்று கிருபாபுரீசராகிய வேதியர் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு எழுந்து நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு:
" நான்மறை முனிவ னார்க்கு நம்பியா ரூரர், தோற்றீர்;
பான்மையின் ஏவல் செய்தல் கடன்' என்று பண்பில் மிக்க மேன்மையோர் விளம்பரும்பி, விதிமுறை இதுவே ஆகில் யான்.இதற்:கிசையேன். என்ன, இசையுமோ? என்று - - - கின்றார்.' நம்பிஆரூரர்-நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி நாய னாரே, விளி. நான் மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம்,அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களை யும் முறையாக அத்தியயனம் செய்து நிறை வேற்றிய, மறை; ஒருமை பன்மை மயக்கம். முனிவனார்க்கு-முனிவ ராகிய இந்த வேதியரிடம்: உருபு மயக்கம். தோற்றிர்-நீர் தோல்வியை அடைந்து விட்டீர். பான்மையின்-உரிய தன்மையோடு. ஏவல்-இவருக்குக் குற்றேவல்களை ஒருமை பன்மை மயக்கம். செய்தல்-புரிவது. கடன்-உம்முடைய கடமை ஆகும். என்று-என.. பண்பில்.நல்ல குணங்களால்: