பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பெரிய புராண விளக்கம்-2

உருபு மயக்கம். மிக்க-மிகுதியான சிறப்பைப் பெற்றவர் களும்; பெயரெச்ச வினையாலணையும் பெயர். மேன்மை யோர்-மேம்பாட்டைப் பெற்றவர்களும், திருவெண்ணெய் நல்லூரில் இருந்த நியாய சபையில் அமர்ந்திருப்பவர்களும் ஆகிய வேதியர்கள்: ஒருமை பன்மை மயக்கம். விளம்பஇவ்வாறு தீர்ப்பைக் கூற. நம்பி-நம்பியாரூரராகிய சுந்தர மூர்த்திநாயனார். விதி-நீங்கள் விதித்த முறை-நீதி முறை. இதுவே-இதுதான். ஆகில்.ஆனால். யான்-நான். இதற்கு-இந்தத் தீர்ப்புக்கு. இசையேன்- சம்மதிக்க மாட் டேன். என்ன-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. இசையுமோ அது பொருந்துமோ. என்று-என்று கிருபாபுரீ சராகிய வேதியர் திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. நின்றார்-நியாயசபைக்கு முன்னால் நின்று கொண்டிருந்

தார். . . -

அடுத்துஉள்ள 64-ஆம் பாடலின் கருத்து வருமாறு: செல்வத்தில் மிகுதியைப் பெற்று விளங்குபவர்களும். திருவெண்ணெய் நல்லூரில் இருக்கும் நியாயசபையில் அமர்ந்திருப்பவர்களும் ஆகிய வேதியர்கள் அவ்வாறு தங்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த செழிப்பைப் - பெற்ற வேதியனாகிய முனிவனைப் பார்த்து, அருமை யான முனிவனே, நீ முன்னால் காண்பித்த அடிமை ஒலையில் எங்களுடைய பெருமையைச் சேர்ந்துள்ள ஊராகிய திருவெண்ணெய் நல்லுரே உன்னுடைய ஊராக எழுதியி ருப்பதைப் பார்த்தால் உனக்கு இந்தத் திருவெண்ணெய் நல் லூரில் பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் வீட்டையும் நெடுங்காலமாக வாழும் வாழ்க்கையையும் எங்களுக்குக் காட்டுவாயாக’’ என்று கூறினார்கள். பாடல் வருமாறு:

'திருமிகு மறையோர் கின்ற செழுமறை முனியை நோக்கி,

'அருமுனி, முேன் காட்டும் ஆவண மதனில் எங்கள் பெருமைசேர் பதியே யாகப் பேசிய துமக்கிஷ் ஆளில் வருமுறை மனையும் நீடுவாழ்க்கையும் காட்டு கென்றார்.'