தடுத்தாட்கொண்ட புராணம் - 3
கணா அஞ்சவென்றருள்.’’, அங்கணா அருள்” என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், அங்கணாய் அடைந்தார் வினைதீர்ப்பரே. , அங்கனார் அடியார்க் கருள் நல்குவர்.', அங்கணன் எந்தை. ,'அங்கணாற்கது வாலவன் தன்மையே. , அங்கனனே அமரர்கள்தம் இறைவா போற்றி' என்று திருநாவுக்கரசு நாயனாரும், * அங்கணனே அருளாய்., அங்கண் நம்பி.', 'அங்கணா எனை அஞ்சலென் றருளாய். 'என்று சுந்தரமூர்த்தி நாயனா ரும், அங்கண் அரசை. ’, அங்கனன் அங்தணனாய்.", * அங்கணனே உடையாய்., 'குருந்தம் மேவிய சீர் அங் கணா.’’, ‘அங்கனன் எங்கள் அமரர்பெம்மான்’ என்று மாணிக்கவாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.
மகளிர் கண்களுக்குக் கயல்மீன்கள் உவமை: கய லார் தடங்கண்ணியொடும். , 'கயலார் தடங்கண் அஞ்சொல் நல்லார்.’’, கயலினிணைக் கண்ணாள்.', : கயலார் கண்ணார். , கயலன அரிநெடுங் கண்ணி. , அங்கய லண்கணி அரிவை.', 'கயல சேவகருங் கண்ணியர், , 'கண்கள் இணைக்கயலே.', 'அங்கயற் கண்ணி’ என்று திருஞான சந்பந்தமூர்த்தி நாயனாரும், கயல்மாண்ட கண்ணி.', செங்கயல் ஒண்கண் மடந் தையர்' என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க. -
பின்பு உள்ள 2-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: பெருகியுள்ள நலங்களோடு மிகுதியாக உள்ளதும். ப்ெருமையைப் பெற்றதும் ஆகிய அழகிய அந்தத் திருமுனைப் பாடி நாட்டில் பொருள் அறிவதற்கு அருமை யாகிய இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர் வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் சைவ சமயமும் ஓங்கி வளரும் வண்ணம் திருநாவலேசுவரர் வழங்கிய திருவருளால் திருநாவ லூரில் திருவவதாரம் செய்தருளிய தும்,தவசிகள் பொருந்திய தவம் புரிவதால் மிகுதியாக உள்ள