தடுத்தாட்கொண்ட புராணம் 11 :
திரு-செல்வத்தில் அழகில் எனலும் ஆம். மிகுமிகுதியைப் பெற்று விளங்குபவர்களும் திருவெண்ணெய். நல்லூரில் இருக்கும் நியாய சபையில் அமர்ந்திருப்பவர் களும் ஆகிய; பெயரெச்ச வினையாலணை யும் பெயர். மறை. யோர்-வேதியர்கள்; ஒருமை பன்மை மயக்கம். நின்றதங்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த, செழு-செழிப் பான திருமேனியைப் பெற்ற. மறை-வேதியனாகிய, தினை மயக்கம். முனியை-முனிவனை. நோக்கி-பார்த்து. அரு-அருமையான. முனி-முனிவன்ே; விளி. நீ முன்-நீ. முன்பு. காட்டும்-எங்களுக்குக் காண்பித்த கால மயக்கம். ஆவணமதனில்-அடிமை ஒலையில். அது பகுதிப் பொருள் விகுதி, எங்கள்-எங்களுடைய. பெருமை சேர்-பெருமை. யைப் பெற்று விளங்கும். பதியே - ஊராகிய திருவெண் ணெய் நல்லுரே ஆக-உம்முடைய ஊராக ப்:சந்தி. பேசியது-எழுதப்பட்டிருக்கிறது. அப்படியான ால் என் பதை வருவிக்க. உமக்கு-உனக்கு: பன்மை ஒருமை மயக்கம். இவ்வூரில்-இந்தத் திருவெண்ணெய் நல்லூரில். வரு-பரம் பரை பரம்பரையாக இருந்து வரும், மனையும்-வீட்டையும். நீடு-நெடுங்காலமாக இருக்கும். வாழ்க்கையும்-வாழ்க்கை யையும். காட்டுக-எங்களுக்குக் காட்டுவாயாக. என்றார்என்று கூறினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். காட்டு கென்றார்: தொகுத்தல் விகாரம். -
அடுத்து வரும் 65-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:
ஒப்புக் கூறுவதற்கு அருமையாக உள்ள வழக்கில் வெற்றியைப் பெற்ற புண்ணிய மூர்த்தியாரும் முனிவரும் ஆகிய ருபாபுரீசர், ' என்னை உங்களில் ஒருவரேனும் தெரிந்து கொள்ளாதவர். ஆனால் என்னுடன் நீங்கள் வாருங்கள்’’ என்று திருவாய்மலர்ந்தருளிச் செய்து விட்டு, தம்மைச் சுற்றி இருந்தவர்களும், பெருமையைப் பெற்றவர் களும் ஆகிய வேதியர்களினுடைய கூட்டமும் நம்பி