112 பெரிய புராண விளக்கம்-2
ஆகுரனாகிய சுந்தரமூர்த்தியும் தமக்குப் பின்னால் வரத் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஆலயமாகிய திருவருட் டுறைக்கு உள்ளே நுழைந்தார்; அவரை யாரும் பார்க்க முடியாதவராகித் திகைப்பை அடைந்து எல்லா வேதியர் களும் நின்று கொண்டிருந்தார்கள். பாடல் வருமாறு:
"பொருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர்,
’ * 6T6ếT6ổ)ốữr ஒருவரும் அறியீ ராகில் போதும் என் றுரைத்துச்
சூழகத பெருமறை யவர்கு ழாமும் நம்பியும் பின்பு செல்லத் திருவருட் டுறையே புக்கார்; கண்டிலர் திகைத்து
கின்றார்." பொரு-ஒப்பாகக் கூறுவதற்கு. அரும்-அருமையாக -உள்ள. வழக்கால்-வழக்கில்; உருபு மயக்கம், வென்ற
வெற்றியைப் பெற்ற, புண்ணிய - புண்ணியமூர்த்தியாகிய, முனிவர்-முனிவராக எழுந்தருளிவந்த கிருபாபுரீசர். என்னை ஒருவரும்-என்னை உங்களுக்குள் ஒருவரேனும். அறியீர்தெரிந்து கொள்ளாதவர். ஆகில்-ஆனால். போதும்என்னுடன் வாருங்கள். என்று-ன்ன. உரைத்து-திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. ச்:சந்தி. சூழ்ந்த-தம்மைச் சுற்றியிருந்தவர்களும்; பெயரெச்ச வினையாலணையும் பெயர். பெரு-பெருமையைப் பெற்றவர்களும்; குறிப்பு வினையாலணையும் பெயர். குழாமும்-ஆகிய கூட்டமும். நம்பியும்-நம்பியாரூரராகிய சுந்தர மூர்த்தி நாயனாரும். பின்பு-தமக்குப் பின்னால், செல்ல-வர, த், சந்தி. திருவருட்டுறையே - திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஆலயமாகிய திருவருட்டுறைக்கு உள்ளே. புக்கார்-நுழைந் தார். கண்டிலர்-அவரை யாரும் பார்க்க முடியவில்லை. திகைத்து-திகைப்பை அடைந்து. நின்றார்-யாவரும் நின்று கொண்டிருந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். - .