பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பெரிய புராண விளக்கம்-2

தம்பெரு விருப்பி னோடு

தனித்தொடர்ந் தழைப்ப மாதோ டும்பரின் விடைமேல் தோன்றி

அவர்தமக் குணர்த்தல் உற்றார்.'

எம்பிரான்-அடியேங்களுடைய தலைவனாகிய கிருபா புரீசன். அடியேங்கள் என்றது. சேக்கிழார் தம்மையும் மற்றத் தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. கோயில்திருவெண்ணெய் நல்லூரில் விளங்கும் ஆலயமாகிய திருவருட்டுறைக்கு உள்ளே. நண்ண-நுழைந்து மறைய. இலங்கு-விளங்குகின்ற நூல்-பூணுலை அணிந்த மார்பர்மார்பைப் பெற்றவராகிய சுந்தரமூர்த்திநாயனார். எங்கள்அடியேங்களுடைய இது சுந்தர மூர்த்தி நாயனார் தம்மை யும் வேறு தொண்டர்களையும் சேர்த்துச் சொன்னது. நம்பர்-நம்பிக்கைக்கு உரியவராகிய கிருபாபுரீசர். தம்-தம் முடைய. கோயில்-ஆலயத்துக்கு உள்ளே, புக்கது-நுழ்ைந் தருளியது. வன்கொலோ-ஏனோ? கொல், ஒ; இரண்டும். அசைநிலைகள்.என்று-எனஎண்ணி. நம்பி-நம்பியாரூரராகிய அந்த நாயனார்.தம்-தம்முடைய திருவுள்ளத்தில் உண் டாகிய, பெரு-பெரிய விருப்பினோடு-விருப்பத்தோடு. தனி-தனியாக, த், சந்தி. தொடர்ந்து-பின்பற்றிச் சென்று. அழைப்ப-அழைக்க, மாதோடு விருப்பம் மருவிய - வேற்கண்ணி அம்மையுடன். உம்பரின்-ஆகாயத்தில். விடை மேல்-இடபவாகனத்தின்மேல். தோன்றி-காட்சி கொடுத் தருளி. அவர்தமக்கு-அந்த நாயனாருக்கு. தம்: அசை நிலை. உணர்த்தல் உற்றார்-தெரிவித்தருளவானார்.

நம்பர்: 'நம்பும் பெருமை நன்னா றுடைய நம் பெருமான்', 'நம்பனை நல்லடியார்கள் நாமுடை மாடென்றிருக்ரும் கொம்பனையாள் பாகன்.", கொடி மாடச் செங்குன்றுார் மேய நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.', 'கொல்லேறுடை தம்பன்,",