பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 115

'நம்பனே நடனே.”, நம்பா என்ன நல்கும் பெருமான், "நம்பன் எம் அன்பன்.', செஞ்சடை நம்பன்.", :பழங் காவிரித் தென்கரை நம்பன்.’’, ‘மயேந்திரப் பள்ளியுள் நம்பனாார்.”, நம்பன் நாமம் நமச்சி வாயவே.', 'பெரு வேளுர் நம்பன்." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'நம்பனே எங்கள் கோவே.”, நம்பனை நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் அம்பனை.’’, "நம்பனே நான்மு கத்தாய் ந்ாதனே.”, “நான்மறை ஒதிய நம்பனை. . பூந்துருத் திந்நகர் நம்பன்.’’, நம் பனாகிய நன்மணி கண்டனார்.’’, செஞ்சடை நம்பர்.’’, கடுவாய்க் கரைத்தென்புத்துார் நம்பனை", "நாகம் அரைக்கசைத்த நம்பர்.', 'நம்பனே நான்மறைகள் தொழநின் றானே.”, நம்பனே நான்மறைகளா யினானே. , நம்பனை நால்வேதம் கரைகண் டானை. . . நம்பன்காண் நணுகாதார் புரமூன்றெய்த வில்லான் காண்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், பாண்டிக் கொடுமுடி நம்பனே.”, 'நம்பனை நன்னாறனை.”, நம் பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட சம்பு வே. ', 'நம்பன். நமை ஆள்வான்.’’, அரத்துறைவாய் எங்கள் நம்பனே." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி," என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

பின்பு உள்ள 67-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

முன் காலத்தில் நீ எமக்குத் தொண்டனாக இருந்த வன்; நீ உன்னுடைய உள்ளத்தில் இரண்டு பெண்களிடம் காதல் மிகுதியாகக் கொள்ளப் பிறகு நம்முடைய கட்டளை யினாலே திருநாவலூரில் பிறந்தாய்: மண்ணுலகத்தின்மேல் துன்பங்களை அடையும் வாழ்வு உன்னைத் தொடர்வது நீங்கப் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ச்சியாக வந்த நல்ல அறிவைப் பெற்ற வேதியர்களுக்கு முன்னால் உன்னை