பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பெரிய புராண விளக்கம் -2

யாம் தடுத்து ஆட்கொண்டோம்' என்று கிருபாபுரீசர் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார், பாடல் வருமாறு:

  • முன்பு நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்

பின்புரும் ஏவ லாலே பிறந்தனை மண்ணின் மீது துன்புறு வாழ்க்கை கின்னைத் தொடர்வறத் தொடர்ந்து

நன்புல மறையோர் முன்னர் நாம்தடுத் தாண்டோம். ' - என்றார்.’’ முன்பு-முன்காலத்தில் கயிலாயத்தில் ஆலால சுந்தர னாக. நீ நமக்குத் தொண்டன்-நீ கைலாசபதியாகிய எமக்குத் தொண்டுகளைப் புரிபவனாக இருந்தாய். முன்னிய டஉன்னுடைய உள்ளத்தில் எண்ணிய வேட்கை-இரண்டு பெண்மணிகளிடம் உனக்குக் காதல். கூர-மிகுதியாக உண்டாக. ப்:சந்தி. பின்பு-பிறகு. நம்-எம்முடைய. ஏவலால்-கட்டளையால். ஏ.அசை நிலை. மண்ணின்மண்ணுலகத்தின் மீது-மேல். பிறந்தனை-சுந்தரமூர்த்தி யாகப் பிறந்தாய். துன்பு-துன்பங்களை ஒருமை பன்மை மயக்கம். உறு-அடையும். வாழ்க்கை-வாழ்வு. நின்னை -உன்னை. தொடர்வு-தொடர்தல். அற-நீங்கும் வண் ணம். த்:சந்தி, தொடர்ந்து-உன்னை நாடித் தொடர்ந்து. வந்து-நாம் ஒரு வேதியனுடைய வடிவத்தில் வந்து. நன்நல்ல. புல-அறிவைப் ப்ெற்ற மறையோர்-திருவெண் ணெய் நல்லூரில் இருக்கும் நியாய சபையில் அமர்ந்திருந்த வேதியர்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். முன்னர்முன்னர்ல். நாம்-யாம். தடுத்து ஆண்டோம்-உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம். என்றார்-என்று கிருபாபுரீசர் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

அடுத்து உள்ள 68-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: என இவ்வாறு எழுந்த வார்த்தைகளின் ஒலியைக் கேட்டு தன்னைப் பெற்ற தாய்ப் பசுமாட்டினுடைய கனைப்