பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 117

பைக் கேட்ட கன்றுக் குட்டியைப் போலக் கதறிக்கொண்டு நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனார் தம்முடைய கைகள், பாதங்கள் முதலிய உறுப்புக்களில் உண்டான் மயிர்க்கூச்சு எழும்பத் தம்முடைய சூப்பிக் கும்பிட்ட கைகள் தம்முடைய தலையின்மேல் தாமே இருக்க, சிதம்பரத்தில் விளங்கும் ஆலயத்தில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் இருக்கும் நடராஜப் பெருமானாரே, அடியேனை வலிய எழுந்தருளி வந்து தடுத்து ஆட்கொண்டது தேவரீருடைய செய் கையோ?” என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.” பாடல் வருமாறு:

'என்றெழும் ஓசை கேளா ஈன்ற ஆன் கனைப்புக் கேட்ட

கன்றுபோல் கதறி நம்பி கரசர ணாதி அங்கம் துன்றிய புளகம் ஆகத் தொழுதகை தலைமேல் ஆக மன்றுளிர், செயலோ வந்து வவியஆட்கொண்ட

- தென்றார்.' என்று-என எழும்-ஆகாயத்தில் எழுந்த ஒசை-, வார்த்தைகளின் ஒலியை கேளா-கேட்டு. ஈன்ற-தன் னைப் பெற்ற. ஆன்-தாய்ப் பசு மாட்டினுடைய. கனைப்புகனைப்பை. க்:சந்தி. கேட்ட கன்று-கேட்ட கன்றுக்குட் டியை. போல்-போல. கதறி-கதறிக்கொண்டு. நம்பி-நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி நாயன்ார். கர-தம்முட்ைய கைகள், ஒருமை பன்மை மயக்கம். சரணாதி-பாதங்கள் முதலிய ஒருமை பன்மை மயக்கம். அங்கம்-உறுப்புக்களில்: ஒருமை பன்மை மயக்கம். துன்றிய-அமைந்த. புளகம்மயிர்க்கூச்சு. ஆக-உண்டாக, த்:சந்தி. தொழுத-சூப்பிக் கும்பிட்ட கை-தம்முடைய கைகள்; ஒருமை பன்மை மயக்கம். தலைமேல்-தம்முடைய தலையின் மேல். ஆகதாமே ஏற. வந்து-அடியேன் இருக்கும் இடத்துக்கு எழுந் தருளி. வலிய ஆட்கொண்டது-வலிய அடியேனைத் தடுத்து ஆட்கொண்டது. மன்று-சிதம்பரத்தில் விளங்கும் ஆல