118 பெரிய புராண விளக்கம்-2
யத்தில் இருக்கும் திருச்சிற்றம்பலத்தில் உளிர்-எழுந்தருளி யிருப்பவராகிய நடராஜப் பெருமானாரே. உளிர்: இடைக் குறை. செயலோ-தேவரீருடைய அருட்செயலோ என்றார்என்று அந்த நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பிறகு வரும் 69-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'எண்ணுவதற்கு உரிய நாகசுரம், ஒத்து, மத்தளம், கஞ்ச தாளங்கள், உடல் என்னும் ஐந்து வாத்தியங்கள் எழுப்பிய இனிய நாதம் ஆகாயத்தில் முழுவதும் நிரம்பி எல்லா இடங்களிலும் தேவலோகத்தில் வாழும் தேவர்கள் சொரிந்த கற்பக மரத்தில் மலர்ந்த மலர்களைச் சொரிந்த மழை தரை முழுவதும் நிரம்பி மிகுதியாக விளங்க, இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் மகிழ்ச்சியினால் துள்ளிக் குதிக்க, இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் முழக் கத்தை எழுப்பிப் பேரொலியை உண்டாக்க, தலைவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை அடிமை ஒலையைக் காட்டியரு ளித் தடுத்து ஆட்கொண்டவராகிய கிருபாபுரீசர் பின் வரு மாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்வாரானார். பாடல் வருமாறு: - - --
எண்ணிய ஓசை.ஐந்தும் விசும்பிடை கிறைய எங்கும் விண்ணவர் பொழியூமாரி மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க மறைகளும் முழங்கி ஆர்ப்ப அண்ணலை ஒலை காட்டி ஆண்டவர் அருளிச் - - - செய்வார்.' எண்ணிய-எண்ணுவதற்குரிய ஓசை ஐந்தும்-நாகசுரம், ஒத்து, மத்தளம், கஞ்ச தாளங்கள். உடல் என்னும் ஐந்து வ்ாத்தியங்களும் எழுப்பும் இனிய ஒலி. விசும்பிடை-ஆகா யத்தில், நிறைய-நிறைந்து முழங்க. எங்கும்-எல்லா இடிங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம், விண்ணவர்