பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பெரிய புராண விளக்கம்-2

மற்று-அசைநிலை. நீ-சுந்தர மூர்த்தியாகிய நீ. வன்மை-வலிமையான வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். பேசி-கூறி. வன்றொணடண் என்னும் நாமம்வன்ற்ொண்டன் என்ற பெயரை, பெற்றனை-பெற்று விட் டாய். நமக்கும்-எமக்கும். அன்பால்-பக்தியோடு; உருபு மயக்கம். பெருகிய-பெருகி உள்ள சிறப்பின்-சிறப்பினால்.

மிக்க-மிகுதியான இயல்பைக் கொண்ட. அற்சனைஅருச்சனை. பாட்டோபாடலே ஆகும். ஆதலால்ஆகையால். மண்மேல்-இந்த மண்ணுலகத்தின்மேல். நம்மை-எம்மை ச்:சந்தி. சொல்-இனிய சொற்கள்

அமைந்த ஒருமை பன்மை மயக்கம். தமிழ்-செந்தமிழ் மொழியில் திருப்பதிகங்களை: ஆகுபெயர். பாடுக-நீ பாடு வாயாக. துள்-துாயவையான். மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். பாடும்பாடியருளும், வாயார்-திருவாக்கைப் பெற்றவராகிய கிருபா புரீசர். என்றார்-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடுகென்றார்: தொகுத்தல் விகாரம். சிவபெருமான் வேதங்களை அருளிச் செய்தவர் என்பதைப் புலப்படுத்தும் இடங்களை முன்பே ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க.

பின்பு உள்ள 11-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: 'திருமுடியையும் திருவடிகளையும் அன்னப்பறவையின் வடிவத்தை எடுத்தும், பன்றியின் உருவத்தை எடுத்தும் நிலத்தைத் தோண்டியும் வானத்தில் பறந்தும் தேடியும் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியாதவனும், ந, ம,சி, வா, ய என்ற ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரம் பாடிய பரம்பொருளாக இருப்பவனும் ஆகிய கிருபாபுரீசன், :எம்மை நீ பாடுவாயாக’ என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, விரும்பிய திருவுள்ளத்தைப் பெற்றவராகி நம்பியா