4 பெரிய புராண விளக்கம்.
வளப்பத்தைப் பெற்ற சிவத்தலமுமாக இருப்பது உண்மை பேசுவதில் ஒருகாலமும் குறையாத அழகிய வேதியர்கள் நெடுங்காலமாக வாழ்வதும் ஆகிய சிறப்புக்களைக் கொண்டது திருநாவலூர் ஆகும். பாடல் வருமாறு:
பெருகிய கலத்தால் மிக்க பெருந்திரு நாடு தன்னில்
அருமறைச் சைவம் ஓங்க அருளினால் அவத ரித்த
மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றாத்
திருமறை யவர்கள் நீடும் திருகாவ லூராம் அன்றே.’’
பெருகிய-பெருகி உள்ள. நலத்தால்-பலவகை நலங்
களோடு ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். அந்த நலங்களாவன: நீர்வளம், நிலவளம், செல்வ வளம், நன் மக்கள் வாழும் வளம் முதலியவை.மிக்க-மிகுதியாக உள்ள பெரும்-பெருமையைப் பெற்றதும், திரு-அழகைப் பெற் றதுமாகிய நாடு.தன்னில்-திருமுனைப் பாடி நாட்டில். தன்: அசைநிலை. அரு-பொருளைத் தெரிந்துகொள்வ தற்கு அருமையாக இருக்கும். மறை-இருக்கு வேதம் யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும்; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி, சைவம்-சைவ சமயமும். ஓங்க-ஒங்கி வளரும் வண்ணம். அருளினால்-திருநாவலேசுவரர் வழங்கிய திருவருளால். அவதரித்த-திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளியதும்; பெயரெச்சவினையாலணையும் பெயர். மருவிய-பொருந்திய. தவத்தால்- தவசிகள் செய்யும் தவத்தினால். மிக்க-மிகுதி யாக அமைந்த வளம்-பல வகையான வளங்களைப் பெற்ற தும். பதி-சிவத்தலமும். வாய்மை-உண்மை பேசுவதில், ஆகுபெயர். குன்றா-ஒருநாளும் குறையாத த்:சந்தி. திரு. அழகிய செல்வத்தைப் பெற்ற எனலும் ஆம். மறையவர் கள்-வேதியர்கள்.நீடும்-நெடுங்காலமாக வாழ்வதும் ஆகிய சிறப்புக்களைக் கொண்டது. திருநாவலூர்-திருநாவலூர் .’ என்னும் சிவத்தலம். ஆம்-ஆகும். அன்று, ஏ:இரண்டும் ஈற்றசை நிலைகள்.