தடுத்தாட்கொண்ட புராணம் 12г
ரூரர் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார் சிதம்பரத்தில் விளங்கும் ஆலயத்தில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்: தருளிய நடராஜப் பெருமானாருடைய செந்தாமரை மலர் களைப் போலச் சிவந்த திருவடிகளைத் தம்முடைய கைகளை அஞ்சலியாகக் குவித்துக் கும்பிட்டு நின்று: கொண்டு.” பாடல் வருமாறு:
தேடிய அயனும் மாலுங் தெளிவுறா ஐக்தெ ழுத்தும்
பாடிய பொருளாய் உள்ளான், பாடுவாய் நம்மை' என்ன நாடிய மனத்த ராகி நம்பியா ரூரர் மன்றுள் ஆடிய செய்ய தானை அஞ்சலி கூப்பி கின்று.'
இந்தப் பாடல் குளகம். தேடிய-அன்னப்பறவையின் உருவத்தை எடுத்துத் திருமுடியையும் பன்றியின் வடிவத்தை எடுத்துத் திருவடிகளையும் தேடிப் பார்த்த அயனும்பிரம தேவனும். மாலும்-திருமாலும். தெளிவுறா-ஆகா யத்தில் பறந்தும் நிலத்தைத் தோண்டியும் தெளிவாக அறிய முடியாதவரும்; எதிர்மறைப் பெயரெச்ச வினையாலணை யும் பெயர். ஐந்து எழுத்தும்-ந, ம, சி, வா, ய என்ற ஐந்து எழுத்துகள் அடங்கிய பஞ்சாட்சரம். எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். பாடிய பொருளாய்-பாடிய பரம்பொரு ளாகி. உள்ளான்-இருப்பவனாகிய கிருபாபுரீசன். நம்மை -எம்மை. பாடுவாய-நீ பாடுவாயாக. என்ன-என்று. திருவாய் மலர்ந்தருளிச் செய்ய நாடிய-அவ்வாறு பாட விரும்பிய மனத்தராகி-திருவுள்ளத்தைப் பெற்றவராகி. நம்பி ஆரூரர்-நம்பி ஆரூரராகிய சுந்தரமூர்த்தி நாயனார். மன்றுள்-சிதம்பரத்தில் விளங்கும் ஆலயத்தில் இருக்கும் திருச்சிற்றம்பலத்தில். ஆடிய-திரு நடனம் புரிந்தருளிய செய்ய-செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த தாளை -நடராஜப்பெருமானாருடைய திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். அஞ்சலி-தம்முடைய கைகளை அஞ்சலி