பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பெரிய புராண விளக்கம்-2

யாக கூப்பி-குவித்துக் கும்பிட்டு. நின்று-நடராஜப் பெருமானாருடைய சந்நிதியில் நின்றுகொண்டு.

- - - பிறகு வரும் 72-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்தண வேடத்தைப் பூண்டவனாகி அடியேனை வழிக்கில் வெல்வதற்காக எழுந்தருளிய இலாபமான திருவருட் செயலைத் தெரிந்துகொள்ளாத அடியேனுக்கு உணர்ச்சியை வழங்கி உஜ்ஜீவனத்தை அடையச்செய்து கிடுத்து ஆட்கொண்ட அழுக்கு இல்லாத அமுதத்தைப் போன்ற கிருபாபுரீசனே, இன்றைக்குத் தேவரீருடைய நற் குனங்களாகிய பெரிய சமுத்திரத்தை நாயைப்போன்றவ னாகிய அடியேன் எதைத் தெரிந்து கொண்டு என்ன சொற் களை வைத்துப் பாடுவேன்?' என்று சுந்தரமூர்த்தி நாய னார். திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு:

வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த ஊதியம் அறியாதேனுக் குணர்வுதக் துய்யக் கொண்ட கோதிலா அமுதே, இன்றுன் குணப்பெருங்கடலைகாயேன் யாதினை அறிந்தென் சொல்லிப் பாடுகேன்?"

எனமொழிந்தார்.'

வேதியன்-அந்தண வேடத்தை ஆகுபெயர் ஆகிபூண்டவனாகி. என்ன்ை-அடியேன்ை. வழக்கினால்வழக்கில்: உருபு மயக்கம். வெல்ல-வெல்வதற்காக. வந்தஅடியேன் இருக்கும் இடத்திற்கு எழுந்தருளிய. ஊதியம்அடியேனுக்கு இலாபத்தை வழங்கும் திருவருட் செயலை, அறியாதேனுக்கு-தெரிந்து கொள்ளாத அடியேனுக்கு. உணர்வு-உணர்ச்சியை தந்து-வழங்கியருளி. உய்ய-உஜ்ஜீவ னத்தை அடையச் செய்து. க்சந்தி. கொண்ட-தடுத்து ஆட்கொண்ட கோது-அழுக்கு குற்றம் எனலும் ஆம். இலா-இல்லாத இடைக்குறை. அமுத-அமுதத்தைப் போன்ற கிருபாபுரீசனே. இன்று-இன்றைக்கு. உன்.