பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட Hராணம் 123

தேவரீருடைய. குண-நற்குணங்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பெரும்-பெருமையைப் பெற்ற. கடலை-சமுத்திரத்தை. நாயேன்-நாயைப் போன்ற அடியேன். நாய் ஒரு முறை வேண்டாமென்று கக்கிய உணவை மீட்டும் உண்ணும். அதைப்போல் அனுபவத்தில் தீயவை என்று விலக்கிய பொருள்களை மீட்டும் அவாவி அனுபவிக்கப் புகும் இயல்பை எண்ணி நாயேன்” என்றார். யாதினை-தேவரீருடைய பெருமைகளில் எதை அறிந்து தெரிந்து கொண்டு. என்-என்ன. சொல்லி-சொற்கள்ை வைத்து. பாடுகேன்-பாடுவேன். என-என்று இடைக் குறை. மொழிந்தார்-சுந்தரமூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். - -

கோதிலா அமுது; கோதிலா அமுதே அருள்பெருகு கோருமே. என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், ' குறை விலா நிறைவே கோதிலா அமுதே.' என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

பெரியவர்கள் தம்மை நாயைப் போன்றவன் என்று கூறிக் கொள்ளுதல்: நாயினும் கடைப்பட் டேனை." என்று திருநாவுக்கரசு நாயனாரும், நாயேன்பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னை.", பொய்யவன் நாயடி யேன்.”, நாய்தான் போல நடுவே திரிந்து., 'நாயி னேனைப் பொருட்படுத்து.' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், 'நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு. , 'நனவிலும் நாயேற் கருளினையே., 'பிழைப்பு வாய்ப் பொன் றறியா நாயேன்.', 'கடைய னாகிய நாயினே னா o தலையும்.’’, ‘நாயினேன்றன் கண்ணிணைநின் திருப்பாதப் -

போதுக் காக்கி.", நாயினேற்கே காட்டா தனஎல்லாம் காட்டி', 'நாயி லாகிய குலத்தினும் கடைப்படும் என்னை.', 'நாயினேன் அறிவனாகக் கொண்டேர்.

எனை ஆண்டது.. 'பொல்லா நாயான நீச னேனை.',