பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் - 125

பிறகு உள்ள 73-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

தம்முடைய பக்தனாகிய சுந்தர மூர்த்தியை அருளோடு பார்த்து அழகிய கண்களைப் பெற்ற கிருபாபுரீசர் பின் வரு மாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்வார்; முன்பு நீ என்னைப் பித்தன் என்றே கூறினாய்; ஆகையால் என்னு டைய பெயரைப் பித்தன் என்றே வைத்துப் பாடுவாயாக' என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். நின்று கொண்டி ருந்த பெருமையைப் பெற்றவராகிய வன்றொண்டர் தம்மைத் தடுத்து ஆட்கொண்ட வள்ளலாராகிய கிருபாபுரீ சரை ஒரு திருப்பதிகத்தால் பாடியருளலானார். பாடல் வருமாறு:

'அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார் முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே என்பெயர் பித்தன் என்றே பாடுவாய். என்றார்: கின்ற வன்பெருக் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாட -

லுற்றார்.’’ அன்பனை-தம்முடைய பக்தனாகிய சுந்தரமூர்த்தியை. அருளின்-அருளோடு. நோக்கி-பார்த்து, அம்.அழகிய. கணர்-கண்களைப் பெற்றவராகிய கிருபாபுரீசர். கண்: ஒருமை பன்மை மயக்கம். கணர்: இடைக்குறை. அருளிச் செய்வார்-பின்வருமாறு திருவாய்மலர்ந்தருளிச் செய்வார். முன்பு-முன் காலத்தில். எனை-என்னை; இடைக்குறை. ப்:சந்தி. பித்தன்-நீ பித்தன். என்றே மொழிந்தனைஎன்றே கூறினாய். ஆதலால்-ஆகையால். ஏ:அசை நிலை. என்-என்னுடைய பெயர்-பெயரை. பித்தன் என்றே-பித்தன் என்று வைத்தே. பாடுவாய்-பாடுவாயாக. என்றார்-என்று கிருபாபுரீசர் திருவாய் மலர்ந்தருளிச் செய் தார். நின்ற-திருவருட்டுறை என்னும் ஆலயத்துக்கு முன்னால் நின்று கொண்டிருந்த, வன்பெரும் தொண்டர்பெருமையைப் பெற்ற வன்றொண்டராகிய அந்த நாயனார்.