பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பெரிய புராண விளக்கம்-2

ஆண்ட தம்மைத் தடுத்து ஆட்கொண்ட, வள்ளலைவள்ளலாராகிய கிருபாபுரீசரை. ப்: சந்தி. பாடலுற்றார்ஒரு திருப்பதிகத்தால் பாடலானார்.

அங்கணர் அங்கட் கருணை பெரிதா யவனே.", 'தேவூர் அங்கனன்றனை அ ைட ந் த ன ம்.', " தி ரு ஆ ல வாய் அங்கணா.’, அங்கணர் அமரர்கள் அடியிணை தொழுதெழ.”, 'அரவணையா னொடு பனிமல ரோனும் காணா அங்கணா.', வெங் குருத்திகழ் அங்கணான்.' என்று திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும், அங்கணாய் அடைந்தார் வினைதிர்ப்பரே..", ! அங்கணார் அடியார்க்கருள் நல்குவர். , 'அங்கனன் எந்தை.’, அங்க ணார்க்கதுலாலவன் தன்மையே.' "அங்கணனே அமரர்கள்தம் இறைவா ப்ோற்றி. என்று திருநாவுக்கரசு நாயனாரும், அங்கண்னே அருளாய்.”, * அங்கண் நம்பி, , அங்கணா எனை அஞ்சலென்றரு ளாய்' என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை.', 'அங்கணனே உடை யாய்.”. குருந்தம் மேவிய சீர் அங்கணா.', 'அங்கணன் எங்கள் அமரர் பெம்மான்.', அங்கணன் அந்தணனாய்.” என்று மாணிக்க வாசகரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு உள்ள 74-ஆம் பாடலின் கருத்து வருமாறு: கொத்தில் நிறைந்த மலர்களை அணிந்த கூந்தலைப பெற்றவளாகிய வேற்கண்ணி அம்மையைத் தன்னுடைய திருமேனியில் ஒரு பாதியில் கொண்டவனாகி, தன்னு டைய அடியவர்களிடம் உண்மையான அன்னையைக் காட் டிலும் இனியவனாக விளங்கும் கிருபாபுரீசனை அந்த இயல் தமிழில் தேர்ச்சி, பெற்றவரும், திருநாவலூரில் திருவ வதாரம் செய்தருளியவரும், பெருமையைப் பெற்றவரும் ஆகிய சுந்தரமூர்த்தி நாயனார், பித்தா பிறை சூடி" என்ற தொடக்கத்தைக் கொண்ட பெரியதாக விளங்கும்