பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 127

ஒரு திருப்பதிகத்தை இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக் களும், இது முதலாக இருக்கும் வேறு உலகங்களில் வாழ்ப வர்கள் யாவரும் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் பாடி யருளத் தொடங்கினார். பாடல் வருமாறு:

"கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாய்அடி - . X- யவர்.பால்

மெய்த்தாயினும் இனியானை.அவ்வியல்காவலர்

பெருமான் பித்தாபிறை குடி'எனப் பெரிதாம் திருப்பதிகம் இத்தாாணி முதலாம்.உலகெல்லாம்.உய.

எடுத்தார்."

கொத்து-கொத்தில். ஆர்.நிறைய உள்ள. மலர்மலர் களைச் சூடிய ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. குழலாள்-கூந்தலைப் பெற்ற வேற்கண்ணி அம்மையை. ஒரு கூறாய்-தன்னுடைய திருமேனியில் ஒப்பற்ற பாதியாகக் கொண்டவனாகி; திணை மயக்கம். அடியவர்.பால்-தன்னு: டைய அடியவர்களிடத்தில் ஒருமை பன்மை மயக்கம். மெய்-உண்மையான த், சந்தி. தாயினும்-ஈன்றெடுத்த அன்னையைக் காட்டிலும். இனியானை-இனியலனாக விளங்கும் கிருபாபுரீசனை. அ-அந்த, வ்:சந்தி. இயல்இயல் தமிழில் தேர்ச்சி பெற்றவரும் திணை மயக்கம். நாவலர்-திரு நாவலூரில் திருவவதாரம் செய்தவரும். பெருமான்-பெருமையைப் பெற்றவருமாகிய சுந்தரமூர்த்தி நாயனார். பித்தா பிறை குடி என- பித்தா பிறை, குடி' என்ற தொடக்கத்தைப் பெற்றதும்; இடைக் குறை. ப்: சந்தி. பெரிது ஆம்-பெரியதாக இருப்பதும் ஆகிய திருப் பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. இத் தாரணி-இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்களும் இட் ஆகு பெயர். முதலாம்-முதலாக விளங்கும். உலகு-வேறு. r உலகங்களில்