பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்ட புராணம் 5

அடுத்து வரும் 3-ஆம் பாட்டின் கருத்து வருமாறு:

விருப்பம் மருவிய சுந்தரநாயகி யம்மைய்ைத் தம்மு டைய வாமபாகத்தில் எழுந்தருளச் செய்த திருநாவலேசுவர ருக்குப் பரம்பரை பரம்பரையாக அடிமைத் தொண்டைப் புரியும் மறையவர்களுடைய சாதியில் திருவவதாரம் செய் தருளி மேம்பாட்டைப் பெற்ற சடையனாருக்குக் குற்றம் இல்லாத கற்போடு கூடிய வாழ்க்கையை நடத்தும் அவரு டைய மனைவியாராகிய இசை ஞானியாரிடம் தீமைகள் யாவும் நீங்கி உலகத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் சுந்தரமூர்த்தி நாயனார் திருவவதாரம் செய்தருளினார். பாடல் வருமாறு: -

மாதொரு பாக னார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடைய னாருக் கேதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானி யார்பால் தீதகன் றுலகம் உய்யத் திருவவ தாரம் செய்தார்.” மாது-விருப்பம் மருவிய சுந்தர நாயகி அம்மையை. ஒரு பாகனார்க்கு-தம்முடைய வாமபாகத்தில் எழுந்தருளச் செய்த திருநாவலேசுவரருக்கு. வழிவழி-பரம்பரை பரம் பரையாக. அடிமை-அடிமைத் தொண்டை. செய்யும்புரியும். வேதியர்-மறையவர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். குலத்துள்-சாதியில்; குடும்பத்தில் எனலும் ஆம். தோன்றி-திருவவதாரம் செய்தருளி. திேம்படு-மேம் பாட்டைப் பெற்ற சடையனாருக்கு-சடையனர் என்னும் திருநாமத்தைக் கொண்ட வேதியருக்கு..ஏதம்-ஒரு குற்றமும். இல்-இல்லாத, கடைக்குறை. கற்பின்-கற்பு நிறைந்து விளங்கிய. வாழ்க்கை-வாழ்க்கையை நடத்தும். மனைமனைவியாராகிய, ஒருமை பன்மை மயக்கம். இசை ஞானி யார்பால்-இசை ஞானியார் என்னும் திருநாமத்தைக் கொண்ட அன்னையாரிடத்தில். தி து- தீ ைம க ள்; ஒ ரு ைம լ ննr 6ծ) ւո ம ய க் க ம் , அகன்று-நீங்கி. உலகம்-இந்தப் பூமண்டலத்தில் வாழும்