தடுத்தாட்கொண்ட புராணம் 135
- முறையால்-முறைப்படி வரு-உண்டாகும். மதுரத் துடன்-சுவர விந்தியாச விசேடங்களால் உண்டாகும் இனிமையோடு. மொழி-தாம் பாடியருளிய. இந்தளம்-இந்: தளப் பண் அமைந்த திருப்பதிகத்தில்: ஆகுபெயர். முதலில் -முதற் பகுதியில் குறையா நிலை-குறையாத நிலையைப் பெற்ற, மும்மைப்படி-துரிதம், விளம்பிதம், மத்திமம் என்னும் மூன்று இசை வேறுபாடுகளும்; படி: ஒருமை பன்மை மயக்கம். கூடும்-குற்ையாத வண்ணம் சேர்ந் திருக்கும். கிழமையினால்-உரிமையால். நிறை-ஒசை நிறைந்த, பாணியின்-தாளத்தோடும். இசைகோள்சங்கீதத்துக்குரிய கொள்கையோடும். புணர்-பொருந்தி யதும்; வினையாலணையும் பெயர். நீடும்-நெடுங்கால மாக விளங்கும். புகழ் வகையால்-புகழ்பெறும் வகைக ளோடு; ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். இறை யான்-இறைவனாகிய கிருபாபுரீசன். மகிழ்-மகிழ்ச்சியை அடையும். இசை-அந்த இந்தளப்பண் அமைந்த திருப்பதி கத்தை ஆகுபெயர். எல்லாம்-இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்கள் யாவரும். நிகர்-தனக்கு ஒப்பு. இலான்இல்லாதவனாகிய சுந்தரமுர்த்தி; இடைக் குறை பாடினன்பாடி அருளினான். -
அடுத்து உள்ள 76-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: இனிய சுவைபெற்ற சொற்கள் நிறைந்த செந்தமிழ் மொழியால் இந்தளப் பண் அமைந்த திருப்பதிகத்தைப் பாடியருளிய வன்றொண்டனாகிய சுந்தரமூர்த்தியைப் பார்த்து, இதற்கு மேலும் பல வகைகளில் இந்தப் பூ மண்டலத்தில் நம்முடைய புகழை நீ பாடுவாயாக' என்று தனக்கு உண்டான அன்போடு நல்லவர்கள் வாழும் திரு வெண்ணெய் நல்லூரில் விளங்கும் ஆலயமாகிய திருவருட் டுறையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனும், தன்னுடைய அடியவர்களுக்குப் பல வகையான நம்பிக்கைகளை உண்டாக்