பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பெரிய புராண விளக்கம்-2

குபவனும், எல்லா உலகங்களிலும் வாழ்பவர்கள் உஜ்ஜீ வனத்தை அடையும் வண்ணம் தாரகாட்சன்,வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களையும் திருமாலாகிய அம்பினால் எய்து அழித்தவனும் ஆகிய கிருபாபுரீசன் திருவாய் மலர்ந்தருளிச் செய்தான்." பாடல் வருமாறு.

சொல்லார்தமிழ் இசைபாடிய தொண்டன்றனை, .

- இன்னும் பல்லாறுல கினில்ாம்புகழ் பா டென்றுறு பரிவில் கல்லார்வெண்ணெய் கல்லூரருட் டுறைமேவிய நம்பன் எல்லாவுல குய்யப்புரம் எய்தான்அருள் செய்தான்.' சொல்-இனிய சுவை பெற்ற சொற்கள் ஒருமை பன்மை மயக்கம். ஆர்-நிறைந்த தமிழ்-செந்தமிழ் மொழியில், இசை-இந்தளப்பண் அமைந்த பித்தர் பிறை குடி என்று தொடங்கும் திருப்பதிகத்தை ஆகு பெயர். பாடிய_பாடியருளிய, தொண்டன்றனை-வன் றொண்டனாகிய சுந்தரமூர்த்தியை, தன்: அசை நிலை. இன்னும்-இந்தத் திருப்பதிகத்துக்கு மேலும். பல்லாறுபல வகைகளில்; ஒருமை பன்மை மயக்கம். உலகினில்இந்தப் பூமண்டலத்தில் நம்-எம்முடைய புகழ்-புகழை வைத்து. பாடு-திருப்பதிகங்களைப் பாடுவாயாக. என்று -என. பரிவில்-தனக்கு உண்டான அன்பினால்; உருபு மயக்கம். நல்லார்-நல்ல சான்றோர்கள் வாழும் ஒருமை பன்மை மயக்கம். வெண்ணெய் நல்லூர்-திருவெண்ணெய் நல்லூரில் விளங்கும். அருட்டுறை-திருவருட்டுறை என் னும் பெயரைப் பெற்ற திருக்கோயிலில். மேவிய-விரும்பி எழுந்தருளியவனும்:பெயரெச்சவினையாலணையும் பெயர். நம்பன்-தன்னுடைய அடியவர்களுக்கு, இவரை வணங்கி னால் நமக்கு நிறையச் செல்வம் சேரும்: நல்ல விளைநிலங்: கள் கிடைக்கும் நல்ல திருமாளிகையைப் பெறலாம்: நல்ல மக்கட்பேறு உண்டாகும். நல்ல உறவினர்களும் நண்பர்