தடுத் தாட்கொண்ட புராணம் 137
களும் கிடைப்பார்கள்; நம்முடைய புதல்விக்கு நல்ல கணவன் வருவான்; நம்முடைய புதல்வனுக்கு அழகுள்ள கன்னிகை திருமணம் செய்யக் கிடைப்பாள் என்பவற்றைப் போன்ற நம்பிக்கைகளை உண்டாக்குபவனும், எல்லாஅகில. உலகு-உலகங்களில் வாழ்பவர்களும்; உலகு: ஒருமை பன்மை மயக்கம்: இட ஆகு பெயர். உய்யஉஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். ப்:சந்தி, புரம்தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய பறக்கும் கோட்டைகளாகிய மூன்று புரங்களை ஒருமை பன்மை மயக்கம். எய்தான்-திருமா லாகிய அம்பை எய்து அழித்தவனும் ஆகிய கிருபாபுரீசன். அருள் செய்தான்-திருவாய் மலர்ந்தருளிச் செய்தான்.
திருமாலாகிய அம்பு. குன்ற வார்சிலை நாண் அரா அரி வாளி...மும்மதில் வென்ற என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளியதைக் காண்க.
அடுத்து வரும் 77-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
அயலாக உள்ள மக்கள் ஆகிய பிறர் தவத்தை இடை. விடாது முயற்சிசெய்து சிவகதியைப் பெறுவார்கள் அல் லவா? ஆனால் திருமணம் நடைபெறாமல் தடைபட்ட அன் றைக்கே தன்னுடைய உள்ளம் வருந்தும் செய்கையோடு: இருந்தவளும், புத்தூரில் பிறந்த ஆதி சைவ அந்தணனாகிய சடங்கவி சிவாசாரியாருடைய புதல்வியும் ஆகிய கன்னிகை. உயர்ச்சியைக் கொண்ட திருநாவலூரில் திருவவதாரம் செய் தருளிய ஒப்பற்ற தலைவனாகிய சுந்தரமூர்த்தியை இடை விடாமல் தியானம் செய்த வழியினால், நீங்காமல் வானுல கத்திற்கு ம்ேலே உயர்ந்த சிவலோக பதவியையும் எளியதாக இருக்கும் விதத்தால் பெற்றாள். பாடல் வருமாறு: