தடுத்தாட்கொண்ட புராணம் 139
நல்லூரில் மேவி விளங்கும் ஆலயமாகிய திருவருட்டுறையில் விரும்பி எழுந்தருளியுள்ள கிருபாபுரீசராகிய அந்தணர் தன்னைத் தடுத்து ஆட்கொண்டதற்குப் பிறகு செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், ஆம்பல் மலர், அல்லி மலர், குமுத மலர், நீலோற்பல மலர் முதலிய நீர்ப்பூக்கள் மலர்ந்த தடாகமும் பொய்கையும் விளங்கும் திருநாவலூருக்குள் துழைந்து தேவர்களின் தலைவனான திருநாவலேசுவரனை வணங்கிவிட்டு அந்த நாயனார் ஒரு திருப்பதிகத்தைப் பாடி
யருளினார். பாடல் வருமாறு:
'நாவலர்கோன் ஆரூரன் தனைவெண்ணெய் நல்லூரில்
மேவும்.அருட்டுறையமர்ந்த வேதியர்ஆட் ೧àTಣಿ-ಣ್ಣ .
-- - - 6 or
பூவலரும் தடம்பொய்கைத் திருநாவலூர்புகுந்து
தேவர்.பிரான் தனைப்பணிந்து திருப்பதிகம் பாடினார்.'
நாவலர்-திருநாவலூரில் திருவவதாரம் செய்தருளிய வனாகிய.கோன்-அரசனும்.ஆரூரன்தனை-நம்பியாருரனும் ஆகிய சுந்தரமூர்த்தியை. தன்.அசை நிலை. வெண்ணெய் நல்லூரில்-திருவெண்ணெய் நல்லூரில். மேவும்-மேவி விளங்கும். அருட்டுறை-ஆலயமாகிய திருவருட்டுறையில். அமர்ந்த-விரும்பி எழுந்தருளியுள்ள. வேதியர்-அந்தண ராக எழுந்தருளி வந்த கிருபாபுரீசர், ஆட்கொண்டதற்பின் -தடுத்து ஆட்கொண்டதற்குப் பிறகு, பூ-செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், ஆம்பல் மலர், அல்லி மலர், குமுத மலர், நீலோற்பல மலர், செங்கழுநீர்ப் பூ முதலிய o நீர்ப்பூக்கள்: ஒருமை பன்மை மயக்கம். அலரும்-மலர்ந் திருக்கும். . தடம்-தடாகத்தையும். பொய்கை-மனிதர் ஆக்காத நீர் நிலையையும் பெற்ற த்:சந்தி. திருநாவலூர் -திருநாவலூருக்குள். புகுந்து-நுழைந்து. தேவர்-தேவர் களினுடைய ஒருமை பன்மை மயக்கம். பிரான்தனைதலைவனாகிய திருநாவலேசுவ்ரனை. தன்: அசை நிலை. ப்:சந்தி. பணிந்து-சுந்தரமூர்த்தி நாயனார் வணங்கிவிட்டு.