பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - பெரிய புராண விளக்கம்-2

மக்கள்; இட ஆகு பெயர். உய்ய-உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். த்:சந்தி. திருவவதாரம் செய்தார்-சுந்தரமூர்த்தி நாயனார் திருவவதாரம் செய்தருளினார்.

வழிவழி அடிமை செய்தல்: மாதொரு பர்க ரன்பின் வழிவரு மலாடர் கோமான்' என்று பெரிய புராணத்தில் வருவதைக் காண்க.

அடுத்து வரும் 4-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'தலைவனாகிய திருநாவலேசுவரன் வழங்கிய திருவரு ளால் அறிவிற் சிறந்த சான்றோர்கள் வாழ்த்தும் நம்பி ஆரூரர் என்றே திருநாமத்தையும் சடையனாருக்கும் இசை ஞானியாருக்கும் பிறந்த ஆண் குழந்தைக்குச் சொல்லி வைத்து அழகு மிகுதியாக உள்ள ஐம்படைத் தாலியையும் சதங்கைகளையும் அணிந்து, அழகிய மாணிக்கச் சுட்டியை யும் புனைந்து, சிவந்த தங்கத்தாற் செய்த அரைநாண் தம் முடைய இடுப்பில் மின்னலைப் போல ஒளியை வீச, வீதியில் சிறு தேரைத் தள்ளி வரும் காலத்தில். பாடல் வருமாறு:

'தம்பிரான் அருளி னாலே தவத்தினால் மிக்கேனர் போற்றும் நம்பியா ரூரர் என்றே காமமும் சாற்றி மிக்க - ஐம்படை சதங்கை சாத்தி அணிமணிச் சுட்டி சாத்திச் செம்பொன்காண் அரையில் மின்னத் தெருவில்தேர்

உருட்டும் நாளில். இந்தப் பா ட ல் குளகம்.தம்பிரான்-தலைவனாகிய திரு நாவலே சுவரன். அருளினால் - வ ழ ங் கி ய தி ரு வ ரு ளா ல். ஏ : அ ைச நி ைல. த. வ த் தி

னால்-தாங்கள் புரிந்த தவத்தினால். மிக்கோர்-சிறப்பை மிகுதியாகப் பெற்ற தவசிகள்; ஒருமை பன்மை மயக்கம். போற்றும்-வாழ்த்தும். நம்பி ஆரூரர் என்று- நம்பி ஆரூரர் என. ஏ: அசைநிலை. நாமமும்-திருநாமத்தையும். சாற்றிசடையனாருக்கும் இசை ஞானியாருக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு இட்டுச் சொல்லி, மிக்க-அழகு மிகுதியாக