142 - பெரிய புராண விளக்கம்-2
திருத்துறையூர்: இது நடு நாட்டில் பெண்ணை யாற்றின் கரையில் விளங்கும் சிவத்தலம். இங்கே கோயில்கொண்டிருப் பவர் பசுபதீசுவரர். அம்பிகை பூங்கோதை நாயகி. இந்தத் தலம் இக்காலத்தில் திருத்தளுர் என்று வழங்கும். இது பண்ணுருட்டியிலிருந்து வடமேற்கில் ஐந்து மைல் த்ாரத்தில் உள்ளது. சிவஞான சித்தியார் என்னும் சைவ சித்தாந்த நூலைப் பாடியருளிய சகலாகம பண்டிதர் என்னும் காரணத் திருநாமத்தைப் பெற்ற அருணந்தி சிவாசாரியர் என்ற திருநாமத்தைக் கொண்ட சந்தானாசிரியர் திருவவ தாரம் செய்தருளிய தலம் இது. இதைப்பற்றிச் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:
'விண்ணார்ந்தன மேகங்கள் கின்று பொழிய
மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபாற் பண்ணார் மொழிப் பாவையர் ஆடும் துறையூர் - அண்ணாஉனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.' பசுபதீசுவரரைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு: .
'சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுகின் தாள்பரவி
ஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங் கங்கைஎன்னும் காம்பலைக் கும்பனைத் தோளி கதிர்ப்பூண் . . .
. . . * வனமுலைமேல் பாம்பலைக் கும்.சடை யாய்எம்மை ஆளும் பசுபதியே."
அடுத்து உள்ள 80-ஆம் பாடலின் கருத்து வருமாறு: சுந்தரமூர்த்திநாயனார் விண்ணப்பித்துக் கொண்ட வண்ணமே, மெய், வாய், கண்கள், மூக்கு, செவிகள் என்னும் ஐந்து இந்திரியங்களும் ஒன்றாகப் பொருந் தியிருக்குமாறு தவத்தோடு தாம் விரும்பிய வழியை வழங்கி யருளப் பலவகையான மலர்களைக் கொண்ட மரங்கள் வளர்ந்து நிற்கும் நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த திருத்