தடுத்தாட்கொண்டபுராணம் . 1:43,
துறையூரில் விரும்பி விற்றிருந்தருளுபவரும், பிறைச்சந்திர னும் குளிர்ச்சியைப் பெற்ற கங்கையாற்றின் நீரும் விளங்கும் நீளமான சடாபாரத்தைத் தம்முடைய தலையிற் கொண்டவருமாகிய பசுபதீசுவரருடைய திருவடிகளைப் பல வகையான மலர்களைக் கொண்டு அருச்சனை செய்து வாழ்த்துக்களைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து வன் றொண்டராகிய அந்த நாயனார் வணங்கினார்.
பாடல் வருமாறு : - -
புலனொன்றும் படிதவத்திற் புரிந்தநெறி கொடுத்தருள
அலர்கொண்ட நறுஞ்சோலைத் திருத்துறையூர் அமர்ந் - தருளும. நிலவும்தண் புனலும்ஒளிர் நீள்சடையோன் திருப்பாதம். மலர்கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் -- ... .
வன்றொண்டர்.” புலன்-சுந்தரமூர்த்தி நாயனார் விண்ணப்பித்துக் கொண்ட வண்ணமே, மெய், வாய், கண்கள், மூக்கு, செவிகள் என்னும் ஐந்து இந்திரியங்களும் ஒருமை பன்மை மயக்கம். ஒன்றும்படி-ஒன்றாகப் பொருந்தியிருக்குமாறு. தவத்தில்-தவத்தோடு உருபு மயக்கம். புரிந்த-தாம் விரும்பிய நெறிவழியை கொடுத்தருள-வழங்கியருள. அலர்கொண்ட-பல வகையான மலர்களைக் கொண்ட மரங்கள் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். அந்த மரங்களாவன: மா மரம், மகிழ மரம், பவள மல்லிகை மரம், வாகை மரம், வேங்கை மரம்,பூவரச மரம், வில்வ மரம்,புளிய மரம்,விளாமரம்,வேப்ப மரம்முதலியவை. நறும்-நறுமணம் கமழும். சோலை-பூம் பொழில் சூழ்ந்த த்:சந்தி. திருத்துறையூர்-திருத்துறையூரில். அமர்ந்தருளும்-வீற்றிருந்தருளும். நிலவும்-பிறைச்சந்திர னும். தண்-குளிர்ச்சியைப் பெற்ற புனலும்-கங்கையாற்றின் நீரும். ஒளிர்-தங்கி விளங்கும். நீள்-நீளம்ான, சட்ையோன்