144 பேரிய புராண விளக்கம்-2
சடாபாரத்தைத் தன்னுடைய தலையிற் கொண்ட பசுபதீசு வரனுடைய. திருப்பாதம்-திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். மலர்-பல வகையான மலர்களை ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், சாதிமல்லிகை மலர், முல்லை மலர், இருவாட்சி மலர், மகிழ மலர், பவளமல்லிகை மலர், ஊசி மல்லிகை மலர், மஞ்சள் செவ்வந்தி மலர், வெள்ளைச் செவ்வந்தி மலர், தும்பை மலர், கரந்தை மலர், குமுத மலர், அரளி மலர், நீலோற்பலமலர் முதலியவை. கொண்டு-கொண்டு அருச்சனை புரிந்து. போற்று-வாழ்த் துக்களை ஒருமை பன்மை மயக்கம். இசைத்து-திருவாய் மலர்ந்தருளிச் செய்து. வன்றொண்டர்-வன்றொண்டராகிய
சுந்தரமூர்த்தி நாயனார். வந்தித்தார்-பசுபதீசுவரரை வணங்கினார்.
புலன்களை வெல்லுதல் வென்றிலேன் புலன்கள் ஐந்தும்.’’ என்று வருவதைக் காண்க.
பிறகு வரும் 81-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு : 'திருத்துறையூரில் சுந்தரமூர்த்தி நாயனார் பசுபதீசு வரரை வணங்கிவிட்டுச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் தாம் வண்ங்குவதற்குப் பொருத்தமாக இருக்கும் சிவத்தலங் கள் பலவற்றிலும் நுழைந்து அந்தத் தலங்களில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை வணங்கி விட்டு, தங்கத்தால் வேய்ந்த விமானத்தோடு விளங்கும் ஆலயம் திகழும் பெரும்பற்றப்புலியூராகிய சிதம்பரத்துக்கு எழுந்தருளி, அந்த ஆலயத்தில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்கும் நடராஜப் பெருமானாருடைய அழகிய திருநடனத்தை வணங்குவதற்கு எண்ணத்தைப் பெற்று வருத்தம் இல்லாத விருப்பத்தால்அந்தத் தலத்துக்கு உரிய வழியில் எழுந்தருளுவதற்குத் திருவுள்ளம் அந்த
நாயனார்.கொண்டார். பாடல் வருமாறு: