பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திருத்துறையூர் தனைப்பணிந்து சிவபெருமான் அமர்ந் - தருளும், பொருத்தமாம் இடம்பலவும் புக்கிறைஞ்சிப் பொற்புலியூர் கிருத்தனார் திருக்கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று வருத்தமிகு காதலினால் வழிக்கொள்வான் மனம் -

- - கொண்டார்.” திருத்துறையூர்தனை-திருத்துறையூரை அடைந்து.தன்: அசை நிலை. ப்:சந்தி, பணிந்து-அந்தத் தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பசுபதீசுவரரை வண்ங்கி விட்டு. சிவபெருமான் அமர்ந்தருளும்-சிவபெருமான் எழுந்தருளியிருக்கும். பொருத்தம்ாம்-தமக்குப் பொருத்த மாக இருக்கும். இடம்-சிவத்தலங்கள், ஒருமை பன்மை மயக்கம். பலவும் - பலவற்றிலும். புக்கு - நுழைந்து. இறைஞ்சி-அந்தத் தலங்களில் திருக்கோயில், கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை வணங்கிவிட்டு. ப்:சந்தி. பொன்-தங்கத்தால் வேய்ந்த விமானத்தைப் பெற்ற புலியூர்-பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் விளங்கும் ஆலயத்தில் உள்ள திருச்சிற்றம்பலத்தில்:இட ஆகு பெயர் நிருத்தனார்-திரு நடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானாருடைய திரு-அழகிய, க்:சந்தி. கூத்து-திருநடனத்தை ச்:சந்தி. தொழுவதற்கு - வணங்குவதற்கு. நினைவுற்று-எண்ணத்தை அடைந்து. வருத்தம்-வருந்துதல். இகு-நீங்கிய காதலினால்-விருப் பத்தால். வழிக்கொள்வான்-சிதம்பரத்திற்குச் செல்லும் வழியில் எழுந்தருளுவதற்கு. மனம் கொண்டார்-அந்த நாயனார் திருவுள்ளம் கொண்டார். -

அழகிய திருநடனம்; 'ஆடிய அழகன்' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பாடியருளியதைக் காண்க.

அடுத்து உள்ள 82-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

பெ.-2-10