146 பெரிய புராண விளக்கம்-2
மலையில் வளர்ந்து நிற்கும் சந்தன மரம், அகில் மரம், அங்கே நடனமிடும் மயில்களினுடைய தோகைகள், அங்கே வளரும் மரங்களில் மலர்ந்த மலர்கள் ஆகியவற்றைத் தான் பாயும் இடங்கள் எல்லாவற்றிலும் பரவச்செய்து மாணிக்கங் களைக் கொழிக்கும் அலைகளை உண்டாக்கும் குளிர்ச்சியான நீர் ஓடுகின்ற பெண்ணை யாற்றைச் சுந்தரமூர்த்தி நாயனார் கடந்து அந்த ஆற்றின் கரையின்மேல் ஏறிய பிறகு, பூட்டி யிருக்கும் ஏழு:பச்சைக் குதிரைகளைக் கொண்ட உயரமான தேரில் சூரியன் மேற்குச் சமுத்திரத்திற்குப் போவதற்காக அடையும் மாலை நேரம் வர, அந்த நாயனார் திருவதிகை வீரட்டானத்திற்கு வெளியில் போய்ச் சேர்ந்தருளினார். பாடல் வரும்ாறு: -
- மலைவளர்சந்தகில்பீலி மலர்பரப்பி மணிகொழிக்கும்
அலைதருதண் புனற்பெண்ணை ஆறுகடந்தேறியபின் கிலவுபசும் புரவிகெடும் தேரிரவி மேல்கடலிற் -
செலஅணையும் பொழுதணையத் திருவதிகைப் புறத்த
- - • . ,- * ணைந்தார்.” மலை-மலையின்மேல். வளர்-வளர்ந்து நிற்கும். சந்து-சந்தன மரம். அகில்-அகில் மரம். பீலி-அங்கே ஆடும் மயில்கள் உதிர்த்த தோகைகள்: ஒருமை பன்மை மயக்கம். மலர்-அந்த மலையில் வளரும் பல வகை மரங் களில் மல்ர்ந்த மலர்கள்: ஒருமை பன்ம்ை ம்யக்கம். அந்த மலர்களாவன: வேங்கை மலர் வாகை மலர், தாழம்பூ, மகிழ மலர், வில்வ மலர், விளா மலர், மா மலர், பவள மல்லிகை மலர், வேப்ப மலர், பூவரச மல்ர், வாத நாரா யண மலர், புலிநகக் கொன்றை மலர், சரக்கொன்றை மலர், தேக்க மலர், புளியம் பூ முதலியவை. பரப்பி-தர்ன் பாயும் இட்ங்களில் பரவச் செய்து. மணி-மாணிக்கங்களை ஒருமை பன்மை மயக்கம். கொழிக்கும்-கொழித்து வீசும். அலை-அலைகளை ஒருமை பன்மை மயக்கம். தரு