பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பெரிய புராண விளக்கம்-2

விரட்டானேசுவரனுடைய. தாள்-திருவடிகளை ஒருமை பன்மை ம்யக்கம். புரிவு-விரும்பும் விருப்பத்தை. உடைய -பெற்ற மனத்தின்ராய்-திருவுள்ளத்தைக் கொண்டவ ராகி. ப்:சந்தி. புடை-தம்முடைய பக்கத்தில். எங்கும். எல்லா இடங்களிலும் ஒருமை பன்ம்ை ம்யக்கம். மிடை கின்ற-நெருங்கியிருக்கின்ற பரிசனமும்-தம்முடன் வந்த பரிவார மக்களும். துயில்-உறக்கத்தை. கொள்ள-மேற் கொள்ள ப்:சந்தி. பள்ளியமர்ந்தருளினார்-தாமும்,பள்ளி கொண்டருளினார். -

பின்பு உள்ள 85-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: அவ்வாறு சுந்தரமூர்த்தி நாயனாரும் அவருடைய பரிவார மக்களும் உறங்குவதைப் பார்த்துத் திருவதிகை வீரட்டானத்தில் விரும்பிக் ேக யி ல் கொண்டு எழுத்தருளியிருப்பவரும், அழகிய கண்களைப் பெற்றவரும் ஆகிய வீரட்டானேசுவரர் முதுமையை அடைந்த திருவுரு வத்தைப் பெற்ற ஒரு வேதியராகித் தாம் வருவதை முன்னால் உள்ள ஒருவரும் தெரிந்து கொள்ளாமலேயே பொதுவான சித்த வட மடத்தில் உள்ள மடத்துக்குள் நுழைந்து மலர்மாலையை அணிந்தவராகிய சுந்தர மூர்த்தி நாயனாருடைய அழகிய தலையின்மேல் செந்தாமரை ம்லர்களைப் போன்ற தம்முடைய திருவடிகளை வைத்துக் கொண்டு பள்ளிகொண்டருள்பவரைப் போலப் - படுத்திருந் தார். பாடல் வரும்ாறு :

"அதுகண்டு விரட்டத் தமர்ந்தருளும் அங்கணரும்

முதுவடிவின் மறையவ்ராய் முன்னொருவர் அறியாமே பொதுமடத்தி னுட்புகுந்து பூந்தாரான் திருமுடிமேல்

புதும்மலர்த் தாள்வைத்துப் பள்ளிகொள்வார் “. .

- போற்பயின்றார்." அது-அவ்வாறு சுந்தரமூர்த்தி நாயனாரும் அவருடைய பரிவார மக்களும் உறங்கும். அந்தச் செயலை. கண்டு