தடுத்தாட்கொண்ட புராணம் 151
பார்த்து. விரட்டத்து-திருவதிகை விரட்டானத்தில் அமர்ந் தருளும்-விரும்பிக் கோயில் கொண்டருளும். அம்-அழகிய கணரும்-கண்களைப் பெற்ற வீரட்டானேசுவரரும். கண்: ஒருமை பன்மை மயக்கம். கணர் - இடைக்குறை. . முதுமுதுமையை அடைந்த. வடிவின்-திருவடிவத்தைக்கொண்ட - மறையவராய்-ஒரு வேதியராய். முன்-தம்முடைய முன்னால் படுத்து உறங்கும். ஒருவர்-ஒருவரும். அறியாமேதெரிந்து கொள்ளாமலேயே. பொது-பொதுவான, மடத் தினுள்-சித்தவடமடத்தில் உள்ள மடத்துக்குள். புகுந்துநுழைந்து. பூந்தாரான் - மலர்மாலையை அணிந்த சுந்தர மூர்த்தியினுடைய. திரு-அழகிய முடிமேல்-தலையின்மேல். பதும மலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். த், சந்தி. தாள் - தம்முடைய திருவடி களை. ஒருமை பன்மை மயக்கம். வைத்து வைத்துக் கொண்டு, பள்ளி கொள்வார்-பள்ளி கொண்டருள்பவரை. போல்-போல. பயின்றார்-படுத்துக்கொண்டிருந்தார். .
பின்பு உள்ள 86-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
அவ்வாறு வீரட்டானே சுவரராகிய வேதியர் தம்முடைய தலையின்மேல் திருவடிகளை வைத்துப் படுத் திருந்த அந்த நிலையை நம்பியாரூரனாகிய சுந்தர மூர்த்தி தெரிந்து கொண்டு, அருமையான அந்தணனே, உன்னு டைய திருவடிகளை என்னுடைய தலையின் மேல் வைத்துக் கொண்டு படுத்திருக்கிறாயே' என்று திருவாய்மலர்ந்த, ருளிச் செய்ய, இன்ன திக்கு என்று தெரியாத விதத்தி னால் அவ்வாறு நான் புரிந்ததற்குக் காரணம் என்னுடைய முதுமைப் பருவம்; பார்' என்று வீரட்டானேசுவரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, அதை ஒப்புக்கொண்டு தன்னுடைய தலையை வேறு ஓரிடத்தில் வைத்துக் கொண்டே செந்தமிழ் மொழியின் தலைவனான சுந்தர