பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடுத்தாட்கொண்டபுராணம் 155

அடைந்து, தம்மானை அறியாத சாதியார் உளரே? என்று - தம்மானை அறியாத சாதியார் உளரே. எனத் தொடங்கி. அம்மானை-தலைவனும் த்:சந்தி. திருவதிகை வீரட்டானத்து-திருவதிசை வீரட்டானத்தில், அமர்ந்தவிரும்பிக் கோயில்கொண்டு எழுந்தருளியிருப்பனுைம்: பெயரெச்ச வினையாலணையும் பெயர். கை-துதிக்கையைப் பெற்ற மாவின்-தாருகா வனத்து முனிவர்கள் தன்னைக் கொல்லும் பொருட்டு அனுப்பிய ஆண்யானையினுடைய, உரியானை-தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்துக் கொண்டவனும் ஆகிய வீரட்டானேசுவரனுடைய உருபு மயக்கம். க்சந்தி. சுழல்-வீரக் கழலை பூண்ட திருவடிகளை ஆகுபெயர். கழல் இன்ன தென்பதை வேறோரிடத்தில் கூறினோம்: ஆண்டுக் கண்டுணர்க. பணிந்து-வணங்கிவிட்டு. பாடினார்.அந்த நாயனார் ஒரு திருப்பதிகத்தைப் பாடி யருளினார். அப்போது அந்த நாயனார் சொல்லிக் கெளவாணப் பண்ணில் பாடியருளிய திருப்பதிகத்தில் வருவதும் மேலே குறிப்பிட்டதும் ஆகிய பாசுரம் வருமாறு: '

தம்மானை அறியாத சாதியார் உளரே! - - சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள்

-- - - . . . விகிர்தன் கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்

உடையானை விடையானைக் கறைக்கொண்ட - - - கண்டத்

தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத்

திடும்என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா,

. . . . . . . நாயேன் எம்மானை எறிகெடில் வீரட்டானத் துறைவானை

இறைபோதும் இகழ்வன்போ லியானே. அடுத்து உள்ள 89-ஆம் செய்யுளின் உள்ளுறை

தங்கத்தின் தொகுதியையும், மாணிக்கத்தின் தொகுதி யையும், போர் புரியும் யானைகளினுடைய வெண்மையான