156 பெரிய புராண விளக்கம்-2
தந்தங்களையும், மின்னல்கள் சேர்ந்து ஒளி வீசினாற்போல ஒளியை வீசும் வெண்மையான முத்துக்களையும், நறுமணம் கமழும் பல வகையான மலர்களையும், வாசனை கமழும் அகிற்கட்டை, சந்தனக்கட்டை என்பவற்றையும் வலிமை யைப் பெற்ற அலைகளினால் கொண்டு வந்து திருவதிகை விரட்டானத்தின் வழியே ஒடுவதால் தெற்குத் திக்கில் உள்ள செந்தமிழ் நாட்டில் ஒடும் கங்கையாறு என்று பாராட்டப் பெறும் அழகிய கெடில நதியில் சுந்தரமூர்த்தி நாயனார் படிந்து நீராடி, பாட்ல் வருமாறு: - -
'பொன்திரளும் மணித்திரளும் பொருகரிவெண் -
. . . . கோடுகளும் மின்திரண்ட வெண்முத்தும் விரைமலரும்
. நறுங்குறடும் வன்திரைக ளாற்கொணர்ந்து திருவதிகை
- வழிபடலால்
தென்திசையிற் கங்கையெனும் திருக்கெடிலம்
s திளைத்தாடி.' இந்தப் பாடல் குளகம். பொன்-தங்கத்தின். திரளும்தொகுதியையும். மணி-மாணிக்கங்களின் ஒருமை பன்மை மயக்கம். திரளும்-தொகுதியையும். பொரு-ஒன்றனோடு ஒன்று மோதும். கரி-யானைக்ளினுடைய ஒருமை பன்மை மயக்கம். வெண்-வெண்மை நிறத்தைப் பெற்ற கோடு களும்-தந்தங்களையும். மின்-மின்னல்கள்: ஒருமை பன்மை மயக்கம். திரண்ட-கூடி ஒளியை வீசுவதைப் போல ஒளியை விசும், வெண் - வெள்ளை நிறத்தை உடைய, முத்தும். முத்துக்களையும். ஒரும்ை பன்மை மயக்கம். விரை-நறு மணம் கமழும். மலரும்-பல வகையான மலர்களையும்: ஒருமை பன்மை மயக்கம். அந்த மலர்களாவன:செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், சாதிமல்லிகை மலர், முல்லை மலர், இருவாட்சி மலர், பவளமல்லிகை மலர், அல்லி மலர், ஆம்பல் மலர், தாழம்பூ, புளிய மலர், மாமலர்,