தடுத்தாட்கொண்ட புராணம் 157
வாழைப்பூ, மகிழ மலர், வெட் சி மலர், சரக் கொன்றை மலர், புலிநகக்கொன்றை மலர், நீலோற்பல மலர், குமுத மலர், பூவரச மலர், மஞ்சட் செவ்
வந்தி மலர், வெள்ளைச் செவ்வந்தி மலர், அரளி மலர், வாகைமலர், வேங்கைமலர், சண்பகமலர், குருக்கத்திமலர், ஆத்திமலர் முதலியவை. நறும்-நறுமணம் கமழும். குறடும்அகிற்கட்டையையும், சந்தனக்கட்டையையும் ஒருமை பன்மை மயக்கம். வன்-வலிமையான. திரைகளால்-அலை களால். கொணர்ந்து-கொண்டு வந்து. திருவதிகை-திரு வதிகை விரட் டான் த் தி ல். வழிபட்லால்-வழியே ஒடுவதால் வணங்குவதால் என்று ஒரு பொருள் தொனிக்கிறது. தென்திசையில்-பாரத நாட்டின் தெற்குத் திசையில் உள்ள செந்தமிழ் நாட்டினுடைய ஆகுபெயர். கங்கை-கங்கையாறு. எனும்-என்று பாராட்டப் பெறும்: இடைக்குறை. திரு.அழகிய க்:சந்தி. கெடிலம்-கெடில நதியில். திளைத்து-படிந்து. ஆடி-நீராடி.
அடுத்துவரும் 90-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: - சுந்தரமூர்த்தி நாயனார் அழகிய கண்களைப் பெற்றவ ராகிய விரட்டானேசுவரருடைய திருவடிகளை வாழ்த்தி வணங்கிவிட்டு, அந்தத் திருவதிகை விரட்டானத்திலிருந்து புறப்பட்டு அப்பால் எழுந்தருளி, நீர் பொங்கி ஓடும் அந்தக் கெடில நதியின் தெற்குக்கரை வழியாக எழுந்தருளி, போர் செய்யும் வலிமையைப் பெற்ற தோள்களைக் கொண்ட மகா பலிச் சக்கரவர்த்தி செய்த மங்கலமான யாகத்தில் பழைய காலத்தில் வாமன அவதாரத்தை எடுத்தவனாய் மூன்று. அடிகள் நிலத்தை அந்தச் சக்கரவர்த்தியிடம் யாசகம் செய். தருளிய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த கண் களைப் பெற்ற திருமால் வணங்கி நலம்பெற்றதும், மாணிக்க வரதேசுவரர் திருக்கோயில் விளங்குவதும் ஆகிய திருமானி குழி என்னும் சிவத்தலத்தை அந்த நாயனார் அடைந்தார், பாடல் வருமாறு: - - - -