8 பெரிய புராண விளக்கம்-2
தேத்தி மேவக், கருதும் புராண முடிவிற் குஞ்சரத்தில் கடத்திவர்ந் தோங்கு தில்லைத், தெருவாய் உலாப்போது சேவையர் குலாதிபன் சிறுதேர் உருட்டியருளே. சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினோன் சிறுதேர் உருட்டி பருளே, (சேக்கிழார் பிள்ளைத்தமிழ், 10:1), பருந்து பல சூழப் புலால்கமழும் வெம்படைப் பருவலித் தகுவர் மூவர் பற்றியமர் குங்கும உடம்பனைய திரிபுரப் பாழிமுற் றும் கெடுப்பான், பொருந்துவட மேருவில் வளைத்தரவு நாண் கொளி.இப்பொருகடல் சுவற்று வாளிப் பொருகணை கரம் கொண்டு நான்மறைப் பரிமலர்ப் புத்தேள் கடாவி நிற்ப, மருந்துபடு மதியமும் பருதியும் சகடாய் வயங்கக் கொடிஞ்சி முதலா மற்றுள உறுப்பு மற்றுள தேவராக நெடு வாழ்த்துமல் குறஇலர்ந்து, திருந்துபுவி யாகிய பெருந்தேர் உருட்டினோன் சிறுதேர் உருட்டியருளே செல்லமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதேர் உருட்டியருளே.'" (அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ், 10:1)என்று திரிசிர புரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய வற்றைக் காண்க. 'தண்டேன் உடைந்தொழுகு மருமாலை நீள்முடிதரிக்கும் சதக்கிருது செந்தருணமணி ஆசனத்தேறமா தலிசெழுந் தமனியத் தேர்உருட்டப், பண்டே பழம்பகை நிசாசரர்கள் உட்கப் பரப்புநிலை கெட்ட தென்று பரவும் குபேரன் வட பூ தரம்பொரு புட் பகத்தேர் உருட்ட வீறு, கொண்டே உதித்தசெங் கதிர் ஆயிரக்கடவுள் குண்டலம் திருவில் வீசக் கேலப் ரபா மண்டலச்சுடர் துளக்கமுட் கோல்எடுத் தருணவருணன், திண்டேர் உருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே சிறுதேர் உருட்டியருளே சேவற். பதாகைக் குமாரகம் பீரனே சிறுதேர் உருட்டியருளே.' (திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், 10:1), இந்திரன் குடைபிடிக்க அழற்கடவுள் எதிரிலே நின்று விசிறி வீச எமனும் நிருதியும் சாமரை பரிமாற வாயுவும், சந்திரனும் உடைவாள் ஏந்தி இருபுறமும் நிற்கக்