162 பெரிய புராண விளக்கம்-2
எழுத்தருளி வந்து அவர்களுக்குத் தம்முடைய காட்சியை வழங்கியருளி அவர்களைச் சிவலோக பதவியை அடையச் செய்தருளினார்; வியப்பு உண்டாகுமாறு தினைப் பயிர்கள் விளைந்த காரணத்தால் இந்தத் தலத்திற்குத் திருத்தின்ை நகர் என்னும் திருநாமம் உண்டாயிற்று ஆலயத்திற்கு வடக் கில் சாம்புவ தடாகம் என்ற திருக்குளம் இருக்கிறது; இந்தத் 'தலத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு:
வடிகெர்ள் கண்ணிணை மடந்தையர் தம்பால்
மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி முடியுமாகரு தேல்எரு தேறும்
மூர்த்தியைமுத லாய பிரானை அடிகளென்றடி யார்தொழுதேத்தும்
அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச் செடிகொள் கான்ம்லி திருத்தினை நகருட்
சிவக்கொ முந்தினைச் சென்றடை மன்னே." இந்தப் பர்சுரம் தக்க்ேசிப் பண்ணில் சுந்தரமூர்த்தி நாய னார் பாடியருளியது. அவர் பாடியருளிய மற்றொரு பாசுரம் வருமாறு:
நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிரைவனை மடந்தை கூறு தாங்கிய கொள்கையி னானைக்
குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல் ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
கரிய சோதியை வரிவரால் உகளும் சேறு தாங்கிய திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மண்ன்ே." பின்பு உள்ள 92-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு: தேன் நிர்ம்பிய மலர்களைக் கட்டிய மாலையை அணிந்த பெருமையை உடைய அழகிய மார்பைப் பெற்ற