164 பெரிய புர்ாண விளக்கம்-2
பன்மை மயக்கம். த்:சந்தி. தண்-குளிர்ச்சியைக்கொண்ட, பூ-மலர்கள்: ஒருமை பன்மை மயக்கம். மலங்க-சிதையும் வண்ணம். எதிர்-அவற்றுக்கு எதிரில். பாய்வன-துள்ளிப் பாய்பவைகளாக இருக்குப. மாடு-பக்கத்தில். ஏ:அசை நிலை, புள்-மீன் கொத்திப் பறவை முதலிய நீர்ப்பறவை கள்; ஒருமை பன்ம்ை மயக்கம். அலம்பு-கூல்கின்றவையாக இருக்கும். திரை-அலைகள் வீசும் ஒருமை பன்மை மயக்கம். வெள்-வெண்மை நிறத்தை உடைய. வளைசங்குப் பூச்சிகள்: ஒருமை பன்மை மயக்கம். வாவி-உள்ள வாவியில். வாவி:வாபி என்னும் வட சொல்லின் திரிபு. த்:சந்தி. தாம்-பாயும். மலங்குகள் மலங்கு மீன்கள் வாழும். தடம்-தடாகமும். பனை-வயல்களும்; ஒருமை பன்மை மயக்கம். அந்த வயல்களாவன: சம்பா நெற்பயிர் கள் விளையும் வயல், குறுவை நெற்பயிர்கள் வளரும் வயல், கரும்புத் தோட்டம், வெற்றிலைக் கொடிக்கால் முதலியவை. சூழும்-சுற்றி விளங்கும். தண்-குளிர்ச்சியைக் கொண்ட. மருங்கு-பக்கத்தில் வந்து தொழுவார்கள்தம்-வணங்குபவர் களுடைய. தம்: அசைநிலை. மா-பெரிய. மும்மை மலங் கள்-ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களை யும். அற-போகும் வண்ணம். வீடு-செய்து பிறகு முத்தியை. அருள்-வழங்கியருளும் நடராஜப் பெருமா துடைய ஆலயம் விளங்கும்; திணை மயக்கம். தில்ல்ை. தில்லை என்னும் சிதம்பரமாகிய, மல்லல்-நீர்வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம், தெருக்களின் வளம், ஆலய வளம் முதலிய வளங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். அம்-அழகிய பதியின்-சிவத்தலத்தி னுடைய எல்லை-எல்லையை, வணங்கி-சுந்தரமூர்த்தி நாயனார் பணிந்துவிட்டு. * .
அடுத்து வரும் 93-ஆம் பாடலின் கருத்து வருமாறு:
புன்னை மரம், மா மரம், மகிழ மரம், சரளதேவதார