தடுத்தாட்கொண்ட புராணம் 165
மரம், சுற்றி வளர்ந்து நிற்கும் தென்ன மரம், கிராம்புகள் விளையும் மரம், நாரத்த மரம், கமுக மரம், குங்குமப் பூ மரம், குளிர்ச்சியைக் கொண்ட வாழை மர வகைகள். இருப்பை மரம், தழைகள் செறிந்த வஞ்சி மரம் ஆகிய பல வகை மரங்கள் எவ்விடங்களிலும், செறிந்து மேகங்களின் கூட்டம் மிகுதியாகத் தவழும் பூம்பொழில்களாக விளங்கி, அவற்றில் உள்ள மரங்களின்மேல் குயில்கள் நெருங்கி அமர்ந்து கொண்டு கூவும்: இவற்றால் போக பூமியாகிய சுவர்க்க லோகத்தைக் காட்டிலும் மிகுதியான சிறப்பைப் பெற்றுத் திகழும் மலர்கள் மலர்ந்திருக்கும் மரங்கள் வளர்ந்து தோன்றும் வெளியில் உள்ள இடத்தைத் தாண்டிச் சிதம்பரத்துக்குள் சுந்தரமூர்த்தி நாயனார் நுழைந்தார்.' பாடல் வருமாறு: - . -
'காக சூதவகு ளம்சா ளம்சூழ்
காளி கேரம்இல வங்கம் கரந்தம்
பூகம் ஞாழல்குளிர் வாழை மதுரகம்
பொதுளும் வஞ்சிபல எங்கும் நெருங்கி
மேக சாலம்மலி சோலைக ளாகி
மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்
போக பூமியினும் மிக்கு விளங்கும்
பூம்பு றம்பணை கடந்து புகுந்தார்."
- நாக்-புன்னை மரம். சூத-மா மரம், வகுளம்-மகிழ மரம். சரளம்-சரளதேவதார மரம். சூழ்-சுற்றி வளர்ந்து நிற்கும். நாளிகேரம்-தென்ன மரம். இலவங்கம்-கிராம்புகள் விளையும் மரம். நரந்தம்-நாரத்த மரம். பூகம்-கமுக மரம். ஞாழல்-குங்குமப் பூ மரம். குளிர்-குளிர்ச்சியைக் கொண்ட, - வாழை-செவ்வாழை மரம், பூவன் வாழை மரம், ரஸ்தாளி வாழை மரம், மொந்தன் வாழை மரம், பேயன் வாழைமரம், பச்சைநாடன் வாழைமரம், கூனி வாழைமரம், தேன் கதலி வாழை மரம் முதலிய வாழை மரங்கள்: ஒருமை