பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பெரிய புர்ான விளக்கம்-2

- பின்பு உள்ள 95-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'தன்னுடைய. வாம பாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற தன்னுடைய தேவியாகிய சிவகாமவல்லி பார்த்து மகிழும் வண்ணமும், பெரிய ஏழு உலகங்களிலும் வாழ்பவர் கள் உஜ்ஜீவனத்தை அடையுமாறும் மேலே ஒரு திருவடி யைத் தூக்கித் திருநடனத்தைப் புரிந்தருளும் நடராஜப் பெருமான் தன்னுடைய திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்புகளின் இனிய நாதத்தை வாழ்த்தும் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்கள்ையும் முறையாக அத்தியயனம் செய்து

நிறைவேற்றிய தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்கள் வாழும் சிவத்தலமாகிய சிதம்பரத்தில் தங்கியிருந்து, ஒவ்வொரு நாளும் நடராஜப் பெருமானைச் சுந்தரமூர்த்தி நாயனார் பணிந்து கொண்டிருக்க, சமுத்திரம் வலமாக வருவது போலப் பக்கத்தில் பக்தர்கள் சுற்றி வரும் தோற்றம் பொருத்தி மிகுதியாக ஆகாயத்தை அளாவ உயர்ந்திருப் பதும், தடாகத்தின் பக்கத்தில் வளரும் மேகங்கள் ஏறித் தவழ்வதும் ஆகிய திருமதிலையும் குளிர்ச்சியைப் பெற்ற நீர் நிரம்பிய அகழியையும் சுந்தரமூர்த்தி நாயனார் தமக்கு எதிரில் பார்த்து மகிழ்ச்சியை அடைந்தார். பாடல் வருமாறு: - ... இடம ருங்குதனி நாயகி காண

ஏழ்பெரும்புவனம் உய்ய எடுத்து. கடம் வின்றருள் சிலம்பொலி போற்றும்

நான்மறைப்பதியை நாளும் வணங்கக் கடல்வலங்கொள்வது போற்புடை சூழும் காட்சி மேவிமிகு சேட்செல ஓங்கும். தடமருங்குவளர் மஞ்சிவர் இஞ்சித்

தண்கி டங்கைனதிர்கண்டு மகிழ்ந்தார்.”

இடமருங்கு-தன்னுடைய வாமபாகத்தில் எழுந்தருளி