பக்கம்:பெரிய புராண விளக்கம்-2.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 - பெரிய புராண விளக்கம்-2

நாயகி. காண நடம் புரிபவன். மங்கை காண நின் றாடுவான்.' என வருதலைக் காண்க. - -

நடராஜப் பெருமான் சிலம்புகளை அணிந்திருத்தல்: சிலம்பின் ஒலிஓசை கலிக்க... கு னி த் தா ர். ’, கழலும் சிலம்பார்க்கும் எ ழி லா ர் மரு த ரை ' ' , *நாகேச் சரநகருள் சிலம்பா.’’, பாதத் தாரொலி பல். சிலம்பினன்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி தாய னாரும், சிலம்பும் செறிபாடகமும். அலம்பும் திருவடி யான்.", 'சிவம்பலம் ப்ாவரு சேவடியான்.’’ என்று திரு நாவுக்கரசு நாயனாரும், அம்பலத் தாடுவான் மலர்சிலம் படி”, - 'சிலம்பலம்பு சேவடியவர்.', 'ஆடற் சிலம்பின் ஒலி கேளா.." என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க. . • . - - * - . . .

அடுத்து வரும் 96-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

சிதம்பரத்தில் உள்ள திருக்கோயிலில் விளங்கும் திருச் சிற்றம்பலத்தில் திரு நடனம் புரிந்தருளும் தேனைப் போன்ற நடராஜப் பெருமானிடம் கொண்ட விருப்பத்தால் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களாகிய வண்டுகள் ரீங்காரம் செய்யும் வெளியிடத்தின் பக்கத்தில் மலையைப் போல விளங்கும் மாணிக்கங்களைப் பதித்த உயரமான திருமதில் சுற்றியிருக்கும் ஆழமான அகழியில் தாமரை மலரில் வண்டு கள் பரவி மொய்க்கும் தாழம்பூவில் பொருந்திய விபூதியைப் போன்ற மகரந்தப் பொடியை அணிந்த உடம்புகளைப் பெற்றவையாகிப் பரிசுத்தமான விபூதியைப் போன்ற மகரந்தப் பொடியைப் பூசிக் கொண்ட சிவபெருமானுடைய தொண்டர்கள் என்று சொல்லும் வண்ண ம் பறந்து போய்ப் போய் முரல்கின்ற அந்த வண்டுகளைப் பார்த்துச் சுந்தரமூர்த்தி நாயனார் தம்முடைய திருவுள்ளத் தில் பக்தியோடு ஆனந்த சாகரத்தில் முழுகி அவற்றுக்கு எதிரில் எழுந்தருளினார். பாடல் வருமாறு: